For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் ஷர்மா, கோஹ்லிக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? இலங்கை ரசிகருக்காக செய்த உதவியை பாருங்கள்

By Veera Kumar

மொகாலி: இலங்கை ரசிகர் ஒருவருக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் ரோகித் ஷர்மா.

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா தனது இரக்கமற்ற ஷாட்டுகளால் எதிரணியை ஒரு சில ஓவர்களிலேயே வதைத்துவிட கூடிய திறமைசாலி. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் இனிமையானவர்.

நேற்றைய மொகாலி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியதை பார்த்து குழந்தை போல அழுத தனது மனைவிக்கு, அன்போடு முத்தம் கொடுத்ததாகட்டும், கேட்ச் விட்ட வீரர்களிடமும் பொறுமையாக நடந்து கொள்வதாகட்டும், ரோகித் ஷர்மா தனி முத்திரை பதித்து வருகிறார்.

மனிதாபிமானம்

மனிதாபிமானம்

இதேபோலதான் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை வீரருக்கு உதவியொன்றை செய்துள்ளார் ரோகித் ஷர்மா. ரோகித் ஷர்மாவின் உதவியால் பலன் பெற்ற ரசிகர் முகமது நிலம். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில், இவரும் 2 நண்பர்களோடு அனைத்து போட்டிகளையும் கண்டு ரசித்து வருகிறார்.

ரசிகர் அவசரம்

ரசிகர் அவசரம்

ஆனால், டெல்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது திடீரென இவர் கொழும்பு திரும்பும் அவசரம் ஏற்பட்டுள்ளது. முகமது நிலத்தின் தந்தைக்கு, புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அவர் உடனே திரும்ப விரும்பியுள்ளார். ஆனால் ஏற்கனவே ரிட்டர்ன் டிக்கெட் எடுத்த நிலையில், புதிதாக டிக்கெட் எடுக்க போதிய பணம் இல்லை என கூறப்படுகிறது.

ரோகித் ஷர்மா, கோஹ்லியின் கவனம்

ரோகித் ஷர்மா, கோஹ்லியின் கவனம்

இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மாவிடம், இந்திய ரசிகரான சுதிர் கவுதம் எடுத்து கூறியுள்ளார். சச்சினின் தீவிர ரசிகரான சுதிர் கவுதம் இந்தியா ஆடும் எல்லா போட்டிகளிலும் மைதானத்தில் அமர்ந்து தேசிய கொடியசைத்து வருபவராகும்.

பணம் கொடுத்த ரோகித்

பணம் கொடுத்த ரோகித்

இந்த தகவலையறிந்த ரோகித் ஷர்மா, பிஸிக்கு நடுவேயும், முகமதுவை இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு கூப்பிட்டு சுமார் 20000 ரூபாய் கொடுத்தனுப்பியதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முகமதுவின் தந்தைக்கு அறுவை சிகிச்சையும் நல்லபடியாக முடிந்துள்ளது. இதுகுறித்து முகமது நிலம் அந்த ஆங்கில பத்திரிகையிடம் தெரிவிக்கையில், "இக்கட்டான நேரத்தில் எனக்கு பணம் கொடுத்து உதவிய நல்ல உள்ளம் கொண்டவர் ரோகித் ஷர்மா" என தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு உதவி

அறுவை சிகிச்சைக்கு உதவி

இதுமட்டுமல்ல, முகமது நிலத்தின் தந்தை அறுவை சிகிச்சைக்கும் ரோகித் ஷர்மா பணம் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால், முகதுதான், வேண்டாம் என கூறி அன்போடு அதை மறுத்துள்ளார். அதேபோல அறுவை சிகிச்சைக்கு உதவ தயார் என்று கோஹ்லியும் முகமது நிலத்திற்கு மெசேஜ் செய்துள்ளார். அதையும் மறுத்த முகமது, கோஹ்லி திருமணத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்ப மறக்கவில்லையாம். இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே மிகவும் அன்பாகதான் நடந்து கொண்டுள்ளனர் என்றும் அந்த பேட்டியில் முகமது நிலம் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, December 14, 2017, 15:42 [IST]
Other articles published on Dec 14, 2017
English summary
A Sri Lankan fan name Mohamed Nilam has revealed how timely financial assistance from star India batsman Rohit Sharma helped him to get to Colombo to attend to his father who was diagnosed with throat cancer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X