For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலககோப்பை தொடருக்கு ரோகித் கொடுத்த ஐடியா.. காசு போயிடுமே சார்.. பிசிசிஐக்கு வைத்த செக்

ஐதராபாத் : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இந்த தொடர் நடப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் முதல்முறையாக உலகக்கோப்பை தொடர் கோடை காலத்தில் நடைபெறாமல் குளிர் காலத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணம் ஐபிஎல் போட்டிகளுக்கு எவ்வித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்பதுதான். பிப்ரவரி மாதம் உலகக்கோப்பை போட்டிகள் நடந்திருக்க வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. அதிரடி வீரருக்கு வாய்ப்பு..மாற்றங்களை எதிர்பாருங்கள்- ரோகித் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. அதிரடி வீரருக்கு வாய்ப்பு..மாற்றங்களை எதிர்பாருங்கள்- ரோகித்

 தடைப்பட வாய்ப்பு

தடைப்பட வாய்ப்பு

ஆனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து அக்டோபர் மாதம் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டம் தென் இந்தியாவில் மழைக்காலம் என்பதால் பல்வேறு போட்டிகள் தடைப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பி சி சி ஐ இதனை கண்டு கொள்ளாமல் தொடரை மாற்றிவிட்டது. சரி மழை இல்லை என்றாலும் பனிப்பொழிவால் நிச்சயம் போட்டிகள் பாதிக்கப்படலாம்.

பனிப்பொழிவு

பனிப்பொழிவு

குறிப்பாக டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்தால் அந்த அணி தோற்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏழு மணிக்கு எல்லாம் பனிப்பொழிவு தொடங்கி விடுவதால், பந்து வீசும் அணி மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதன் காரணமாக பேட்டிங் செய்யும் அணி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுகிறது. இலங்கை பலம் குன்றிய அணி என்பதால் அதனை இந்தியா எளிதில் வீழ்த்தி விட்டது.இதுவே தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து போன்ற அணிகளுடன் இந்தியா மோதி இருந்தால் அப்போது ரிசல்ட் வேற மாதிரி இருந்திருக்கும் .

ரோகித் ஐடியா

ரோகித் ஐடியா

இதற்கு ரோகித் சர்மா ஒரு நல்ல தீர்வை கொடுத்துள்ளார். அதாவது பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் போட்டியை மதியம் 1:30 மணிக்கு தொடங்குவதற்கு பதில் காலை 11 மணி இல்லை 12 மணி என்ற அளவில் தொடங்கினால் பனிப்பொழிவதற்கு முன் போட்டி முடிந்துவிடும் என ரோகித் சர்மா கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு தொலைக்காட்சி நிறுவனங்களும் ஐசிசி யும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

கடுப்பான பிசிசிஐ

கடுப்பான பிசிசிஐ

போட்டி மதியம் நடத்தப்படுவது இரவு நேரத்தில் பல்வேறு ரசிகர்கள் பார்ப்பார்கள். இதன் மூலம் விளம்பரங்கள் நிறைய வரும் என்பதால் தான். தற்போது ரோகித் சர்மா கொடுத்துள்ள ஐடியாவால் பெரும் நஷ்டம் டிவி சேனலுக்கு ஏற்பட்டாலும், அணிகளுக்கு இது நல்ல விஷயமாகும். இதனால் ரோகித் சர்மா நம்மளை இப்படி மாட்டி விட்டாரே என்று பிசிசிஐ கடுப்பில் இருக்கிறது.

Story first published: Tuesday, January 17, 2023, 22:56 [IST]
Other articles published on Jan 17, 2023
English summary
Rohit sharma gives Idea to organize World cup matches earlier to avoid dew factor உலககோப்பை தொடருக்கு ரோகித் கொடுத்த ஐடியா.. காசு போயிடுமே சார்.. பிசிசிஐக்கு வைத்த செக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X