For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொதப்பிய இளம் வீரருக்கு ஆப்பு ரெடி..! வருகிறார் அதிரடி மன்னன்..! ரசிகர்கள் குஷி..!

Recommended Video

IND VS WI TEST 2019 | ராகுலுக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு!- வீடியோ

மும்பை: தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் ரோகித்தை தொடக்க வீரராக களம் இறக்க கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருவதாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருக்கிறார்.

இந்திய அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஆனால், தொடரில் துவக்க வீரராக ராகுல் சொதப்பி தள்ளினார். கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

அதன்பிறகு தொடர்ச்சியாக அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை பயன் படுத்திக் கொள்ளாமல் வீணடித்தார். தொடர்ந்து சொதப்பியதால், டெஸ்ட் தொடரில் இருந்து நீக்க வேண்டும், ரோகித் சர்மாவை கொண்டு வர வேண்டும் என்று கங்குலி, லக்ஷ்மன் உள்ளிட்ட பலர் கருத்து கூறி வந்தனர்.

முதல் கருத்து

முதல் கருத்து

முன்னாள் வீரரும், எம்பியுமான கவுதம் கம்பீரும் இதை தான் வலியுறுத்தி பல தடவை பேசினார். இந் நிலையில் முதன்முறையாக ராகுலின் இடம் குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வாய் திறந்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

தகுதிகள் இருக்கிறது

தகுதிகள் இருக்கிறது

ராகுல் ஒரு சிறந்த வீரர். அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் இது கடினமான காலமாக உள்ளது. அவர் நிச்சயம் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் அனைத்து தகுதிகளும் உள்ளன.

அணியின் நலன்

அணியின் நலன்

மீண்டும் பார்முக்கு வருவார் என்பதும் எங்களது நம்பிக்கை. அப்படி ஒருவேளை அவருக்கு ஆட்டம் கைகொடுக்கவில்லை என்றால் அணியின் நலனை கருத்தில் கொள்வோம்.

ரோகித்துக்கு வாய்ப்பு

ரோகித்துக்கு வாய்ப்பு

அவருக்கு பதிலாக இந்திய அணியின் ஒருநாள் போட்டியின் துணை கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்க பரிசீலிக்கப் படுவார். மேலும் அவரை துவக்க வீரராக களமிறங்கி சோதிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இதுதான் திட்டம்

இதுதான் திட்டம்

அதாவது, சில போட்டிகளில் ராகுலுக்கு வாய்ப்பு கொடுப்போம். அவரது ஆட்டத்தை பார்த்து விட்டு அதன் பிறகு ரோகித்தை அந்த இடத்தில் களம் இறக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

குறைவான சராசரி

குறைவான சராசரி

ராகுல் 2018 முதல் டெஸ்ட் போட்டிகளில் மோசமாக செயல்பட்டு வருகிறார். 2018ம் ஆண்டில், 12 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 22.28 ரன்கள் அடித்தார். இந்த ஆண்டும் 110 ரன்கள் சராசரி 22.00. அதாவது, கடந்த 27 டெஸ்ட் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி வெறும் 22.23 மட்டுமே. அவர் தலா ஒரு சதம், அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார்.

சதம், அரைசதம்

சதம், அரைசதம்

மறுபுறம், ரோகித் சர்மாவை ஒப்பிட்டு பார்த்தால், ரன் விகிதம் மலைக்க வைக்கிறது. அவர் கடந்த 18 டெஸ்ட் இன்னிங்சில் அவரது சராசரி 53. அதில் ஒரு சதம் மற்றும் 6 அரை சதங்கள் அடங்கும். இந்த காரணங்களை முன் வைத்து தான் ரோகித்தை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்கிறது பிசிசிஐ.

Story first published: Tuesday, September 10, 2019, 12:14 [IST]
Other articles published on Sep 10, 2019
English summary
Rohit Sharma may get chance in test opener says chief selector MSK Prasad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X