For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செமி பைனலில் தோற்றாலும் கிங்தான்.. சொல்லி அடித்த ரோஹித் சர்மா.. உலகக் கோப்பையில் புதிய சாதனை!

இந்திய அணியின் துணை கேப்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

Recommended Video

WORLD CUP 2019 Rohit Sharma runs | உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

லண்டன்: இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகள் முடியும் தருவாயை எட்டிவிட்டது. தற்போது உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடந்து வருகிறது.

கடந்த புதன் கிழமை, நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

என்ன அடித்து இருந்தார்

என்ன அடித்து இருந்தார்

இந்த உலகக் கோப்பை தொடரில் 8 லீக் போட்டிகள் (1 ஆட்டம் மழையால் ரத்து) உட்பட இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடியது. இந்த 9 போட்டிகளில் 5 சதங்களை இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அடித்து இருந்தார். அவர் மொத்தம் இந்த தொடரில் 648 ரன்கள் எடுத்தார்.

அடுத்தது என்ன

அடுத்தது என்ன

அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இருந்தார். இவர் 647 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த இடத்தில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் இருந்தார். இவர் 606 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 549 மற்றும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 548 ரன்கள் எடுத்து இருந்தனர்.

இல்லை

இல்லை

இதில் இன்று ஜோ ரூட் மற்றும் வில்லியம்சன் இருவருக்கும் ரோஹித் சர்மாவை முந்த வாய்ப்பு இருந்தது. இன்றைய போட்டியில் இருவரும் செஞ்சுரி போட்டு இருந்தால் ரோஹித் சர்மாவை முந்தி இருப்பார்கள். ஆனால் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்து 578 ரன்களோடு உலகக் கோப்பை தொடரை முடித்துள்ளார். அதேபோல் ஜோ ரூட் 7 ரன்கள் எடுத்து 556 ரன்களோடு ஆட்டத்தை முடித்துள்ளார்.

என்ன சாதனை

என்ன சாதனை

இதனால் தற்போது உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ஆம் இனி இந்த தொடரில் எந்த வீரரும் அவரின் சாதனையை முறியடிக்க முடியாது. ரோஹித் சர்மா அடித்த 648 ரன்கள்தான் இந்த தொடரில் அதிகபட்ச ரன்கள் ஆகும்.

Story first published: Sunday, July 14, 2019, 21:36 [IST]
Other articles published on Jul 14, 2019
English summary
India's deputy skipper Rohit Sharma now officially the highest run-getter of ICC World Cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X