For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு நல்ல காலம்.. உண்மையான சவால் இனி தான் இருக்கு.. கேப்டன் ரோகித் சர்மா கருத்து

மும்பை : இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சாதனையை படைத்தது. இதன் மூலம் மூன்றுக்கு 0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

இந்த தொடரில் விராட் கோலி அதிகபட்சமாக இரண்டு சதங்களை அடித்துள்ளார் .முகமது சிராஜ் பந்து வீச்சில் கலக்கியுள்ளார்.

இந்த தொடரில் வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை.. 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அபாரம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை.. 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அபாரம்

நல்ல விசயங்கள்

நல்ல விசயங்கள்

இந்த தொடர் எங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தத் தொடரை எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. என்னுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எங்களுக்கு விக்கெட்டுகள் தேவைப்படும்போதெல்லாம் அவர்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். இது பார்ப்பதற்கு நிச்சயம் சிறப்பாக உள்ளது.

சிராஜ்க்கு பாராட்டு

சிராஜ்க்கு பாராட்டு

சிராஜ் பந்துவீச்சில் கலக்கி வருகிறார். இந்திய ஆடுகளத்தில் இது போன்ற சிலிப் பில்டர்கள் நிற்க வைத்து மிக நாட்கள் ஆகிவிட்டது. அந்த ஸ்லீப்கள் தேவை தான். முகமது சிராஜ் உடைய திறமை தனித்துவமானது. கடந்த சில ஆண்டுகளாக அவர் தனது திறமையை வளர்த்து சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முகமது சிராஜின் பலம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது நிச்சயம் இந்த கிரிக்கெட்டுக்கு சிறப்பான அம்சமாகும்.

இந்தியாவுக்கு நல்லது

இந்தியாவுக்கு நல்லது

முகமது சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை எடுக்க நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஆனால் துரதிஷ்டமாக அது நடக்கவில்லை. ஆனால் இந்த நான்கு விக்கெட்டும் அவருடையது தான். நிச்சயமாக அடுத்தடுத்த போட்டிகளில் அவர் ஐந்து விக்கெட் வீழ்த்துவார். முகமது சிராஜிடம் நிறைய யுத்திகள் இருக்கிறது. அதை அவர் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு வருகிறார். தற்போது இலங்கைத் தொடர் முடிந்து விட்டது . இன்னும் இரண்டு நாட்களில் நியூசிலாந்து தொடர் தொடங்குகிறது.

சவாலாக இருக்கும்

சவாலாக இருக்கும்

நியூசிலாந்து தொடர் நிச்சயமாக சவால்கள் நிறைந்ததாக இருக்கும். அவர்கள் ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டில் விளையாடி தொடரை வென்று இருக்கிறார்கள். அந்த அனுபவத்துடன் அவர்கள் இங்கு வருவார்கள். ஹைதராபாத்திற்கு நாங்கள் சென்று நியூசிலாந்து எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நாங்கள் திட்டம் தீட்டி அதற்கு தகுந்தார் போல் அணியை மாற்றிக் கொள்வோம். இலங்கை தொடர்போல் நியூஸிலாந்து தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்.

Story first published: Sunday, January 15, 2023, 21:39 [IST]
Other articles published on Jan 15, 2023
English summary
Rohit sharma on india remarkable series win against srilanka இந்திய அணிக்கு நல்ல காலம்.. உண்மையான சவால் இனி தான் இருக்கு.. கேப்டன் ரோகித் சர்மா கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X