For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்னா ஒரு மனசுயா இவருக்கு..” வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் கவுரவம் தந்த ரோகித் சர்மா - விவரம்!

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

Recommended Video

IND vs WI 5th T20 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி *Cricket

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 191/5 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 19.1 ஒவர்களில் 132 ரன்களை மட்டுமே எடுத்தது.

தரமான கம்பேக் தந்த ஆவேஷ் கான்.. 4வது டி20ல் மோசமாக அவுட்டான வெஸ்ட் இண்டீஸ்.. இந்திய அணி அபார வெற்றி! தரமான கம்பேக் தந்த ஆவேஷ் கான்.. 4வது டி20ல் மோசமாக அவுட்டான வெஸ்ட் இண்டீஸ்.. இந்திய அணி அபார வெற்றி!

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

இந்திய அணியை பொறுத்தவரையில் ஓப்பனிங் வீரர் ரோகித் சர்மா ( 33) சூர்யகுமார் யாதவ் (24) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய தீபக் ஹூடா 21 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய போதும், பின்னர் வந்த ரிஷப் பண்ட் (44) சஞ்சு சாம்சன் (30) ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதனால் 20 ஓவர்களில் 191 ரன்களை இந்தியா குவித்தது.

பவுலர்கள் அசத்தல்

பவுலர்கள் அசத்தல்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். அதிகபட்சமாக கேப்டன் நிகோலஸ் பூரண் (24), ரோவ்மென் போவெல் (24) மட்டுமே அடிக்க, 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், ஆவேஷ் கான், அக்‌ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இந்த களத்தில் ரன் குவிப்பது என்பது சாதாரணம் அல்ல. பேட்டிங் எப்படி செய்யப்போகிறோம் என பல குழப்பங்கள் இருந்தன. எனினும் அதிக ஸ்கோர் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 190 என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள பேட்டிங் திறமைக்கு எவ்வளவு பெரிய ஸ்கோரும் போதும் என நாம் நினைக்க முடியாது.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

எங்களின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் தெளிவாக செயல்பட்டனர். அவர்கள் போட்ட திட்டம் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடிந்தது. கடும் வெயிலில் எங்களுக்காக ஆதரவு கொடுக்க வந்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. 5வது போட்டியை எதிர்நோக்கியுள்ளேன் என கூறினார்.

Story first published: Sunday, August 7, 2022, 11:18 [IST]
Other articles published on Aug 7, 2022
English summary
Rohit sharma about India vs west indies 4th t20 ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 4வது டி20 போட்டி ) வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X