For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்ப வாய்ப்பு வந்தாலும் முழு நேர கேப்டனாக நான் ரெடி.. ரோஹித் சர்மா அதிரடி

Recommended Video

எப்ப வாய்ப்பு வந்தாலும் முழு நேர கேப்டனாக நான் ரெடி- ரோஹித் சர்மா- வீடியோ

மும்பை : ஏழாவது ஆசிய கோப்பை தொடரை வென்று சாதித்துள்ளது இந்தியா. இந்த தொடருக்கு இந்திய அணியின் முழு நேர கேப்டன் கோலி ஓய்வில் இருக்க, இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை ஏற்றார்.

இது வரை மூன்று தொடர்களில் கேப்டனாக வென்று காட்டியிருந்த ரோஹித் சர்மா, ஆசிய கோப்பை தொடரை வென்று நான்காவது தொடரையும் வென்று காட்டியுள்ளார்.

இந்த சமயத்தில் எப்போது முழு நேர கேப்டன் பதவி கொடுத்தாலும் தான் ஏற்கத் தயார் என கூறி இந்திய கிரிக்கெட் அரங்கில் அதிரடியை கூட்டியுள்ளார் ரோஹித்.

தோனி மாதிரி நான்

தோனி மாதிரி நான்

தொடர் முடிந்த உடன் செய்தியாளர்களை சந்தித்தார் ரோஹித் சர்மா. அப்போது, "தோனி எப்போதும் பதற்றமடைய மாட்டார். ஒரு முடிவு எடுக்க நேரம் எடுத்துக் கொள்வார். அந்த ஒற்றுமைகள் எனக்கும் உண்டு" என கூறினார். ரோஹித் சர்மா களத்தில் கூட தோனிக்கு மதிப்பளித்து அவரிடம் யோசனைகளை கேட்டு முடிவு எடுக்க தயங்குவதில்லை.

வாய்ப்பு வரும்போது கேப்டனாவேன்

வாய்ப்பு வரும்போது கேப்டனாவேன்

செய்தியாளர்கள் முழு நேர கேப்டன் பதவியை ஏற்க தயாராக இருக்கிறீர்களா என கேட்டனர். அதற்கு, "நிச்சயம். நாங்கள் இப்போது தான் வென்று இருக்கிறோம். நான் நிச்சயம் தயாராகவே இருக்கிறேன். வாய்ப்பு வரும்போது தயாராக இருப்பேன்" என கூறினார்.

வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும்

வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும்

மற்ற வீரர்களுக்கு எந்த பயமும் இல்லாமல் ஆட, அவர்களுக்கு அணியில் இடம் உண்டு என்பதை தான் தெளிவுபடுத்தியதாக கூறினார் ரோஹித். முக்கியமாக அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு என்பதை கூறியது மட்டுமில்லாமல் கடைசி போட்டி வரை அவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சுக்கு பாராட்டு

பந்துவீச்சுக்கு பாராட்டு

இந்த ஆசிய கோப்பை தொடருக்கு நிறைய இளம் வீரர்களோடு வந்து, அவர்களுக்கு பழக்கமில்லாத ஆடுகளத்தில் நன்றாகவே செயல்பட்டார்கள். சுழல் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் எனவும் குறிப்பிட்டு பாராட்டினார் ரோஹித் சர்மா.

Story first published: Saturday, September 29, 2018, 15:42 [IST]
Other articles published on Sep 29, 2018
English summary
Rohit sharma says he is ready for full time captaincy after asia cup victory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X