For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாக்கை காப்பாறிய ரோகித் சர்மா.. 4வது டி20 போட்டியில் ரசிகர்களுக்கு இருந்த ட்விஸ்ட்.. டிராவிட் குஷி!

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டியில் டிராவிட் எடுத்த முடிவு ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இரு அணிகளும் மோதிய இந்த 4வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 191/5 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

செஸ் ஒலிம்பியாட்டில் திடீர் தர்ணா.. ஹாங்காங் வீரர் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு.. என்ன நடந்தது? செஸ் ஒலிம்பியாட்டில் திடீர் தர்ணா.. ஹாங்காங் வீரர் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?

இந்திய பவுலிங்

இந்திய பவுலிங்

பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்த போதும், வெஸ்ட் இண்டீஸ் அணியை ரன் குவிக்க விடாமல் இந்திய பவுலர்கள் அசத்தினர். சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், ரவி பிஷ்னாய், அக்‌ஷர் பட்டேல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இந்நிலையில் இதில் ஆவேஷ் கான் தனி கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஆவேஷ் கானின் சொதப்பல்

ஆவேஷ் கானின் சொதப்பல்

2வது மற்றும் 3வது டி20லும் வாய்ப்பு பெற்ற ஆவேஷ் கான் மிக மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். 2வது டி20ல் 2.2 ஓவர்கள் மட்டுமே வீசி 31 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற சூழலிலும் அதனை கட்டுப்படுத்தாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல 3வது டி20 போட்டியில் 3 ஓவர்களை மட்டுமே வீசி 47 ரன்களை விட்டுக்கொடுத்தார். பதிலுக்கு ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. அவரின் எகானமி 15.33 ரன்கள் ஆகும்.

கம்பேக்

கம்பேக்

இதனையடுத்து இனியும் அவருக்கு வாய்ப்பு தரக்கூடாது என விமர்சனங்கள் குவிந்தன. ஆனால் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா, ஆவேஷ் கானுக்கு ஆதரவாக நின்றனர். ஒருவர் சொதப்பினாலும் வாய்ப்பு தந்தால் தான் நல்ல கம்பேக் தருவார் எனக் கூறினர். ஆனால் ஆவேஷ் கானுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்துக்கொண்டே இருந்தது.

ரோகித்தின் விளக்கம்

ரோகித்தின் விளக்கம்

ஆனால் நேற்றைய போட்டியில் ஆவேஷ் கான் அசத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் 2 விக்கெட்களை கைப்பற்றி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதுவும் டாப் ஆர்டரின் விக்கெட்கள் ஆகும். இதுகுறித்து பேசிய ரோகித் சர்மா, அவேஷ் கானின் திறமை குறித்து எங்களுக்கு தெரியும். அனைவருக்கும் 2 அல்லது 3 போட்டிகள் மோசமாக அமையும். ஆனால் அவரின் திறமையை நாம் மனதில் வைக்க வேண்டும்.

வாய்ப்புகள் உறுதி

வாய்ப்புகள் உறுதி

வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளையும் நேரத்தையும் கொடுக்க வேண்டும். இந்த களத்தை ஆவேஷ் கான் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறினார். இதன்மூலம் 5வது டி20லும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

Story first published: Sunday, August 7, 2022, 19:34 [IST]
Other articles published on Aug 7, 2022
English summary
Rohit sharma Speech about Avesh khan's comeback in 4th t20 match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X