ரோகித் சர்மாவுக்கு பதில் தொடக்க வீரர் யார்? பந்தயத்தில் இருக்கும் 3 வீரர்கள்.. டிராவிட் சாய்ஸ் என்ன?

பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கிறார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் அடைந்துள்ளது.

ரோகித் சர்மா ஒரு வேளை பங்கேற்கவில்லை என்றால், தொடக்க வீரராக களமிறங்கப் போகும் வீரர் யார் என்பதை தற்போது காணலாம்.

ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினைரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை

ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களின் பணியே, ஸ்விங் ஆகும் பந்தை எதிர்கொண்டு, அது பழசாகும் வரை விளையாட வேண்டும். அதற்கு சரியான நபர் ஹனுமா விஹாரி தான். பந்தை லாவகமாக எதிர்கொண்டு , களத்தில் நங்கூரம் போட்டு விளையாட கூடியவர். இதனால் விஹாரிக்கு தான முதல் வாய்ப்பு என தெரிகிறது.

கேஎஸ் பரத்

கேஎஸ் பரத்

பயிற்சி ஆட்டத்தில் 2 இன்னிங்சையும் சேர்த்து 100 ரன்களுக்கு மேல் கேஎஸ் பரத் அடித்துவிட்டார். விக்கெட் கீப்பராக ஏற்கனவே அணியில் ரிஷப் பண்ட் இருப்பதால், நடுவரிசையில் அவருக்கு இடம் இருக்காது. இதனால் கேஎஸ் பரத்தை தொடக்க வீரராக அனுப்பினால், அவரது அனுபவம் கைக் கொடுக்கும். பயிற்சி ஆட்டத்தின் 2வது இன்னிங்சிலும் தொடக்க வீரராக பரத் களமிறங்கி பாஸ் மார்க் வாங்கினார்.

புஜாரா

புஜாரா

இதற்கு வாய்ப்பு குறைவு என்று பரிசீலினை செய்யாமல் இருக்க முடியாது. ஏனெனில் கடந்த இங்கிலாந்து தொடரிலேயே புஜாரா ஒரு இன்னிங்சில் தொடக்க வீரராக தான் களமிறங்கினார். இதனால் புஜாராவுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர் என்பது சவாலான வேலை, அதை செய்ய தனி துணிச்சல் வேண்டும்.

டிராவிட் சாய்ஸ்

டிராவிட் சாய்ஸ்

தற்போது வரை டிராவிட், ரோகித் சர்மா உடல் தகுதியை பெற்று, திரும்ப வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் அணி நிர்வாகம் உள்ளது. தற்போது மற்றொரு தொடக்க வீரராக சுப்மான் கில் இருக்கிறார். சுப்மான் கில் அடித்து ஆடி ரன்களை சேர்க்கிறார். இதனால் சுப்மான் கில்லுக்கு நேர்மாறாக மெதுவாக விளையாடி ரன் சேர்க்கும் விஹாரியை ஓப்பனிங் இறக்க டிராவிட் முடிவு எடுத்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit sharma suffering from covid – 3 batsman can replace rohit as opener ரோகித் சர்மாவுக்கு பதில் தொடக்க வீரர் யார்..?? பந்தயத்தில் இருக்கும் 3 வீரர்கள்.. முடிவு எடுப்பதில் சிக்கல்
Story first published: Sunday, June 26, 2022, 14:59 [IST]
Other articles published on Jun 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X