For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூர்யகுமார் யாதவின் வீக்னஸ் இதுதான்.. ராஸ் டெய்லர் கொடுத்த பலே யோசனை.. அடடா இனி சிக்கல் வந்துருச்சே!

நேப்பியர்: இந்திய அணியில் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையிலான இளம் படை, நியூசிலாந்தின் அனுபவமிக்க படையை வெளுத்து வாங்கியது.

முதல் டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட சூழலில் 2வது டி20 போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதற்கு மிக முக்கிய காரணம் சூர்யகுமார் யாதவின் சதம் தான்.

ஃபிஃபா உலககோப்பை தொடக்க விழா.. இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தி.. காலை வாரிய ஜியோஃபிஃபா உலககோப்பை தொடக்க விழா.. இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தி.. காலை வாரிய ஜியோ

சூர்யகுமாரின் அதிரடி

சூர்யகுமாரின் அதிரடி

ஆசிய கோப்பை தொடர் முதல் யாராலும் தடுக்க முடியாத ஃபார்மில் இருக்கும் அவர் இந்த போட்டியில் 51 பந்துகளில் 111 ரன்களை விளாசி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரை எப்படி தடுப்பது என்பது தெரியாமல் நியூசிலாந்து பவுலர்கள் கடைசி வரை விக்கெட்டே எடுக்கவில்லை. நியூசிலாந்து மட்டுமின்றி மற்ற நாட்டு பவுலர்களும் திணறி வருகின்றனர்.

 டெய்லர் தந்த யோசனை

டெய்லர் தந்த யோசனை

இந்நிலையில் சூர்யகுமார் யாதவை கட்டுப்படுத்த ராஸ் டெய்லர் யோசனை கூறியுள்ளார். அதில், சூர்யகுமார் நல்ல ஃபார்மில் இருந்தால் எந்த பந்து போடுவது என்ற குழப்பம் இருக்கும் தான். எனவே முடிந்தவரை நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனை ஸ்ட்ரைக்கிற்கு கொண்டு வரப்பாருங்கள். அவர்களை விக்கெட் எடுக்க வேண்டும், இல்லையெனில் அவரை வைத்தே ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்ட்ரைக் மட்டும் ரொட்டேட் ஆக கூடாது.

என்ன காரணம்

என்ன காரணம்

சூர்யகுமார் யாதவும் ஒரு மனிதர் தான். நிச்சயமாக தவறுகளை செய்வார். தனக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லையே என அவர் சற்று ஆதங்கப்பட்டாலும், அடுத்த பந்தில் தவறு செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவரை மனரீதியாக கட்டுப்படுத்துவதே முக்கியமான ஒன்று எனக்கூறியுள்ளார். இதெல்லாம் நடப்பதற்கு 50% தான் வாய்ப்பு இருக்கும். ஆனால் அதனை விட்டுவிடாமல் பவுலர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மெல்பேர்னே அதிர்ந்தது

மெல்பேர்னே அதிர்ந்தது

தொடர்ந்து 3வது டி20 போட்டி குறித்து பேசிய அவர், சூர்யகுமார் யாதவ் மெல்பேர்ன் போன்ற பெரிய மைதானத்திலேயே சிக்ஸர்களை விளாசினார். பந்து 10 - 15 இருக்கை வரிசைகளை தாண்டி சென்றது.அதே போன்ற வேகத்தை மெக்லீன் பார்க் மைதானத்தில் காட்டினால், பந்துகள் ஸ்டேடியத்தை விட்டு வெளியே தான் செல்லும் என ராஸ் டெய்லர் எச்சரித்துள்ளார்.

Story first published: Tuesday, November 22, 2022, 12:39 [IST]
Other articles published on Nov 22, 2022
English summary
EX - New Zealand cricketer Ross taylor gives a tips about How bowlers can Control suryakumar yadav
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X