அடுத்த சிஎஸ்கே கேப்டன்? தோனிக்கு பின் ருதுராஜ் கெயிக்வாட் தான்.. சூசகமாக அப்டேட் கொடுத்த மைக் ஹசி!

மும்பை: தோனிக்கு பின் சென்னை அணியை வழிநடத்தும் தகுதி ருதுராஜ் கெயிக்வாடிற்கு இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணி தோல்வியை சந்தித்தாலும், அந்த அணியின் கேப்டனான ருதுராக் கெயிக்வாட் பற்றிய பேச்சுகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தனியாளாக போராடி மகாராஷ்டிரா அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றதுடன், இளம் வீரர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கி கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

இந்திய அணியில் தோனிக்கு நிரந்தர பதவி.. ஆலோசகராக இல்லை.. அழைப்பு விடுத்துள்ள பிசிசிஐ..ரசிகர்கள் குஷி!இந்திய அணியில் தோனிக்கு நிரந்தர பதவி.. ஆலோசகராக இல்லை.. அழைப்பு விடுத்துள்ள பிசிசிஐ..ரசிகர்கள் குஷி!

மைக் ஹசி பாராட்டு

மைக் ஹசி பாராட்டு

இதனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு பின் ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்படுவார் என்று பேச்சுகள் அதிகமாகியுள்ளது. அதற்கேற்ப சென்னை அணியின் முன்னாள் வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹசி, தோனியை போலவே ருதுராஜ் கெயிக்வாட் அமைதியாக சூழலை கையாள்பவர் என்று பாராட்டியுள்ளார்.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

ருதுராஜ் கெயிக்வாட் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹசி கூறுகையில், சென்னை அணியின் கேப்டன் தோனியை மிக அருகில் இருந்து பார்த்து வருபவர் ருதுராஜ். அவரின் சிறப்பு என்னவென்றால், ருதுராஅஜ் சுயம்பாக முன்னேறியவர். இன்னொரு வீரரிடம் இருந்து எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அதனை மட்டும் சரியாக உள்வாங்கி செயல்படுவார். சென்னை அணியின் அடுத்த திட்டம் என்ன என்பது தெரியவில்லை.

தோனியை போல் அமைதி

தோனியை போல் அமைதி

ஆனால் தோனியை போலவே கூலானவர் ருதுராஜ் கெயிக்வாட். பிரஷர் சூழலை அமைதியாக கையாளும் திறமை ருதுராஜிடம் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் போட்டியில் என்ன நடக்கிறது என்பதை வேகமாக புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுபவர். அதுதான் ருதுராஜ் கெயிக்வாடின் ஸ்பெஷல். அனைவருக்கும் ருதுராஜ் கெயிக்வாடை ரசிப்பதற்கு அவரின் குணமும், இயற்கையான ஆட்டமும்தான். ஒரு அணியை வழிநடத்துவதற்கான திறமை அவரிடம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் சிஎஸ்கே கேப்டன்சி?

விரைவில் சிஎஸ்கே கேப்டன்சி?

விஜய் ஹசாரே இறுதிப் போட்டியில் செளராஷ்டிரா அணிக்கு எதிராக 96 பந்துகளில் அரைசதம் விளாசிய ருதுராஜ் கெயிக்வாட், அடுத்த 29 பந்துகளில் சதம் விளாசி அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினார். தேவைக்கு ஏற்ப அதிரடியும், இளம் வீரர்களை கையாண்ட விதமும் வைத்து பார்க்கும் போது அடுத்த சீசனில் ருதுராஜ் கெயிக்வாட் சென்னை கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Australia batter and CSK batting Coach Michael Hussey said the similarities between Ruturaj Gaikwad and Chennai Super Kings skipper Mahendra Singh Dhoni.
Story first published: Friday, December 2, 2022, 19:18 [IST]
Other articles published on Dec 2, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X