For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த நொடிக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன்.. மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.. ருத்துராஜ் பேச்சு

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரராக விளங்கி வரும் ருத்துராஜ் கெய்க்வாட் தனது ஆசை குறித்து பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான ருத்துராஜ் கெய்க்வாட் ஹாட்ரிக் அரை சதம் அடித்தார்.

இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை ருத்துராஜ் கைப்பற்றினார்.

ஷர்துல் தாக்கூர் அபார பந்துவீச்சு.. சென்னையில் நியூசியை புரட்டி போட்ட இந்தியா..ருத்துராஜ் பலே ஆட்டம்ஷர்துல் தாக்கூர் அபார பந்துவீச்சு.. சென்னையில் நியூசியை புரட்டி போட்ட இந்தியா..ருத்துராஜ் பலே ஆட்டம்

மீண்டும் திரும்புகிறார்

மீண்டும் திரும்புகிறார்

இதன் மூலம் இந்திய அணியில் ருத்துராஜ்க்கு இடம் கிடைத்தது.எனினும் காயம் காரணமாக தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் ருத்துராஜ் கெய்க்வாட் திணறியதால் இந்திய அணியில் அவரது இடம் பறிபோனது. தற்போது மீண்டும் இந்திய ஏ அணியில் தமக்கு கிடைத்த வாய்ப்பை ருத்துராஜ் சதம் விளாசி இருக்கிறார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ருத்துராஜ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனதில் ஓடுகிறது

மனதில் ஓடுகிறது

இந்த நிலையில் ருத்துராஜ், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டியில் சென்னையில் விளையாடினார். இது குறித்து பேசிய ருத்துராஜ், சென்னையில் ரசிகர் முன் விளையாடும் போது எப்படி இருக்கும் என்று நான் பார்த்திருக்கிறேன். ரசிகர்கள் ஆக்ரோஷமாக தங்களுடைய அணிக்கு ஆதரவு அளிப்பார்கள். நான் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பயிற்சி செய்து கொண்டு இருந்தேன். அப்போது என் மனதில் இந்த காட்சிதான் ஓடிக்கொண்டே இருந்தது.

காத்து கொண்டு இருக்கிறேன்

காத்து கொண்டு இருக்கிறேன்

நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதற்காக நுழையும் போது மக்கள் எப்படி ஆரவாரம் செய்வார்கள் என்பதை நினைத்து பார்த்தேன். நான் அந்த ஒரு நொடிக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.சென்னையில் தான் என்னுடைய பயணம் முதல் முறையாக தொடங்கியது. சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகுதான் நான் பல விஷயங்கள் குறித்து கற்றுக் கொண்டேன். முதல் அனுபவமே பெரிய அளவில் எனக்கு கிடைத்தது. இங்குதான் எனக்கு அனைத்துமே கிடைத்தது.

சென்னையில் ஐபிஎல்

சென்னையில் ஐபிஎல்

சென்னை மக்கள் முன் மீண்டும் விளையாடுவதை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டியில் 36 ஆட்டங்களில் விளையாடி இருக்கிற ருத்துராஜ் 1207 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் அதிவிரைவாக ஐபிஎல் தொடரில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை ருத்துராஜ் சமன் செய்திருக்கிறார். அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி அனைத்து நகரங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Story first published: Saturday, October 1, 2022, 21:24 [IST]
Other articles published on Oct 1, 2022
English summary
Ruturaj Gaikwad shares about his dream about playing for csk in front of chennai crowdஅந்த நொடிக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன்.. மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.. ருத்துராஜ் பேச்சு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X