இங்கிலாந்தில் நிறவெறி தாக்குதல்.. கோமா நிலைக்கு சென்ற தென்னாப்பிரிக்க வீரர்.. வீரர்கள் செய்த உதவி

பிரிஸ்டல் : இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு கேளிக்கை விடுதிக்கு சென்ற தென்னாப்பிரிக்க வீரர் மொண்ட்லி குமாலோ கடுமையாக தாக்கப்பட்டார்.

Recommended Video

India vs South Africa | BCCI எடுத்த முடிவு | SA Cricketer-க்கு நேர்ந்த கொடுமை | #Cricket

அண்டர் 19 கிரிக்கெட் வீரரான குமாலோ, இங்கிலாந்தில் ஒரு கிளப்பில் விளையாடி வருகிறார். கடந்த மே 29ஆம் தேதி குமாலோ 2 விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.

ஆனால், அடுத்த நாள் போட்டிக்கு குமாலோ வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கிளப் நிர்வாகம் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தது.

நிறவெறி தாக்குதல்

நிறவெறி தாக்குதல்

ஆனால், அவர் தொலைப்பேசியை எடுக்கவில்லை. அப்போது சமூக வலைத்தளத்தில் 20 வயது தென்னாப்பிரிக்க இளைஞர் மீது நிறவெறி தாக்குதல் நடைபெற்றதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து கிளப் நிர்வாகம், மருத்துவமனைக்கு சென்று அது யார் என்று பார்த்த போது தான், அது குமாலோ என தெரியவந்தது.

கோமாக்கு சென்ற வீரர்

கோமாக்கு சென்ற வீரர்

அப்போது குமாலோ கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கிரிக்கெட் விளையாட சென்ற தனது மகனுக்கு நிகழ்ந்த கொடுமையை அடுத்து குமாலோவின் குடும்பத்தினர், இங்கிலாந்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் உதவி

கிரிக்கெட் வீரர்கள் உதவி

இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீட்டர்சன், குமாலோவின் மருத்துவ செலவுக்காக நிதி திரட்டினார். இதே போன்று ஜாஸ் பட்லரும் குமாலோவின் மருத்துவ செலவுக்காக நிதி திரட்டினார். தற்போது வரை இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சம் ருபாய் சேர்ந்துள்ளது.

கண்டனம்

கண்டனம்

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க சீனியர் கிரிக்கெட் அணி குமாலோவின் மருத்துவ செலவுக்கு தாங்களும் உதவ உள்ளதாக தெரிவித்தனர். இதனிடையே, குமாலோ, கோமாவிலிருந்த நினைவுக்கு மெல்ல மெல்ல திரும்பி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
SA cricketer Mondli Khumalo attacked – cricketers came to help for medical expense இங்கிலாந்தில் நிறவெறி தாக்குதல்.. கோமா நிலைக்கு சென்ற தென்னாப்பிரிக்க வீரர்.. வீரர்கள் செய்த உதவி
Story first published: Saturday, June 4, 2022, 8:02 [IST]
Other articles published on Jun 4, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X