For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாட்டிற்கே ‘துரோகம்’.. வாய்ப்புக்காக இப்படி செய்வதா... இளம் வீரரை விளாசிய சாபா கரீம்!

லண்டன்: இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்-க்கு காயம் ஏற்பட்டது பெரும் பேசுப் பொருளாகி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

புதிய உலக சாதனை படைத்த மிதாலி... சச்சின் சாதனையுடன் இணைந்தார்.. பாராட்டி தள்ளிய பிசிசிஐ! புதிய உலக சாதனை படைத்த மிதாலி... சச்சின் சாதனையுடன் இணைந்தார்.. பாராட்டி தள்ளிய பிசிசிஐ!

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விலகும் கில்

விலகும் கில்

ந்த தொடர் தொடங்க இன்னும் 4 வார காலம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு உள்காயம் மிகத்தீவிரமாக இருப்பதாகவும், 2 மாதங்கள் ஓய்வு பெற்றே ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனினும் காயத்தின் முழுமையான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

குழப்பம்

குழப்பம்

ஆஸ்திரேலிய தொடரில் ஓப்பனராக சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில், அதன் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு முதல் தேர்வாக திகழ்கிறார். ஆனால் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வேறு வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.

சாபா கரீம் சரமாரி கேள்வி

சாபா கரீம் சரமாரி கேள்வி

இந்நிலையில் சுப்மன் கில் விலகல் குறித்து முன்னாள் வீரர் சாபா கரீம் அதிருப்தி தெரிவித்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக உள்ளது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தின் 5 டெஸ்ட் போட்டிகள் என நீண்ட தொடரில் இடம்பெற்ற சுப்மன் கில் எப்படி தனது காயத்தை மறைத்தார். வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்த மருத்துவர்களால் கூட அதனை கண்டுபிடிக்க முடியவில்லையா? எனக்கேட்டுள்ளார்.

சாடல்

சாடல்

மேலும் அவர், சுப்மன் கில், இந்திய அணியில் தனது இடத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காகக் காயத்துடன் விளையாடி, சொதப்பலில் ஈடுபட்டுள்ளார். காயம் குறித்து முன்பே தெரிந்திருந்தால் உடற்தகுதியுடன் இருக்கும் வீரரைக் களமிறக்கியிருக்கலாம். கில் தவறு செய்துவிட்டார் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, July 4, 2021, 14:54 [IST]
Other articles published on Jul 4, 2021
English summary
Former Player saba Karim Slams Shubman Gill for hide his injury on Long tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X