நடு இரவில் சாலையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடிய சச்சின்.. காரிலிருந்து இறங்கி சர்ப்ரைஸ் - வீடியோ

Posted By:
தெருவில் இறங்கி கிரிக்கெட் விளையாடிய சச்சின்- வீடியோ

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாலையில் ''தெருவோர கிரிக்கெட்'' விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

மும்பையில் உள்ள எதோ ஒரு சாலையில் இவர் இப்படி கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். நேற்று முதல்நாள் இரவு இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. சச்சின் இப்படி கொடுத்த சர்ப்ரைஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கார்

மும்பையில் பந்த்ரா சாலையில் தெருவோர கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பார்த்தவுடன் சச்சின் காரை நிறுத்தியுள்ளார். அங்கு இருக்கும் ரசிகர்களிடம் சென்று கைகொடுத்துவிட்டு இவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இரவு நேரம் என்பதால் அங்கு பெரிய அளவில் கூட்டம் இல்லை. விளையாடும் இளைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

சிங்கம் பாஸ்

சரியாக ஐந்து பந்துகள் மட்டுமே அவர் பிடித்தார். எல்லா பந்துகளையும் பொறுமையாக அடித்தார். ஆனால் அதற்குள் அங்கு கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. காரில் சென்றவர்கள், காரை நிறுத்தி அவரை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவர் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துவிட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆனார்

இணையம் முழுக்க வைரல்

இந்த வீடியோ இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. இவர் இந்த வீடியோவை ஷேர் செய்து, கிரிக்கெட் கடவுள் பாந்த்ரா தெருக்களில் நேற்று முதல்நாள் இரவு கிரிக்கெட் விளையாடினார் என்றுள்ளார்.

உதவி

இவர் ''வாவ். சச்சினுக்கு நல்ல குணம். அதே சமயத்தில் இப்படி தெருவில் வீரர்கள் வேகமாக வாகனம் செல்லும் சமயத்தில் விளையாடுவது சரியல்ல. இவர் வீரர்கள் பாதுகாப்பாக விளையாட எதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றுள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Sachin's epic street cricket video in Mumbai becomes viral. He played street cricket in Mumbai roads, with his fans on day before yesterday.
Story first published: Tuesday, April 17, 2018, 12:26 [IST]
Other articles published on Apr 17, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற