For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னொரு விக்கெட் அவுட்... தோள்பட்டை காயம்.. இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறினார் சஹா

Recommended Video

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சஹா வெளியே ரிஷப் பந்த் உள்ளே- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் பிரதான டெஸ்ட் விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா தோள்பட்டை காயம் காரணமாக மேலும் 2 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சஹா ஐபில் போட்டிகளில் விளையாடும்பொழுது இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபில் தொடரில் இருந்து பாதியில் விலகினார். இவர் இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் தொடருக்கு முன் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாள்பட்ட அவரது தோள்பட்டை காயத்தின் காரணமாக அவர் மேலும் 2 மாதங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

saha exit from england series

கடந்த முறை தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது சஹாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்டு அவர் ஐபில் போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் இப்போது தோள்பட்டை வலியின் காரணமாக அவரால் களத்தில் இறங்கி விளையாட முடியாமல் போயிற்று.

சஹாவின் காயத்தினால் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திற்கு கிடைத்துள்ளது. அணியின் பிரதான விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் மற்றும் பந்த் அவருக்கு மாற்று வீரராக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது.

Story first published: Friday, July 20, 2018, 15:49 [IST]
Other articles published on Jul 20, 2018
English summary
Saha has been opted out and will not part of England series due to shoulder pain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X