3 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டி.. சஞ்சு சாம்சனுக்கு அவசர அழைப்பு.. கேரள ரசிகர்கள் உற்சாகம்

திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.

சஞ்சு சாம்சன், திறமையான இளம் வீரராக இருந்தாலும், அவருக்கு போதிய வாய்ப்பு சீனியர் அணியில் கொடுக்கப்படவில்லை.

சரியாக விளையாடாத ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கேரள ரசிகர்கள் பலரும் பிசிசிஐக்கு எதிராக போர் கொடி தூக்கினர்.

சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு தரல.. இதில் புது வீரர் வேற யா ? காமெடி பண்றாங்க.. நியூசி. வீரர் கருத்து சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு தரல.. இதில் புது வீரர் வேற யா ? காமெடி பண்றாங்க.. நியூசி. வீரர் கருத்து

காயம்

காயம்

இந்த நிலையில், ரிஷப் பண்ட் கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதனால், சஞ்சு சாம்சனுக்கு தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது வாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக சஞ்சு சாம்சன் இன்று முக்கிய முடிவை எடுத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ரஞ்சி போட்டியிலிருந்து காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விலகினார்.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

அதன் பிறகு தொடர்ந்து உள்ளூர் ஒருநாள் போட்டி, டி20 , ஐபிஎல் என இந்த மூன்று தொடரிலும் மட்டும் தான் கவனம் செலுத்தினார். தற்போது 3 ஆண்களுக்கு பிறகு சஞ்சு சாம்சன், ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கேரள கிரிக்கெட் வாரியம் சஞ்ச சாம்சனை ரஞ்சி கோப்பையில் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.

திட்டம்

திட்டம்

இதனையடுத்து, ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வரும் 13ஆம் தேதி சஞ்சு சாம்சன் கேரள அணிக்காக விளையாடுகிறார். இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில், சஞ்சு சாம்சன் மீண்டும் ரஞ்சி போட்டியில் தனது திறமையை நிரூபித்து தேர்வுக்குழுவினருக்கு நெருக்கடியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

3 முக்கிய தொடர்

3 முக்கிய தொடர்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரும் நடைபெறுகிறது. இந்த தொடர்களில் விளையாட இடம் கிடைக்க குறிவைத்தே சஞ்சு சாம்சன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sanju Samson is back to test cricket after 3 long years 3
Story first published: Friday, December 9, 2022, 17:07 [IST]
Other articles published on Dec 9, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X