For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“மாநாடு படம் மாறி இருக்கே".. சஞ்சு சாம்சன் - சிராஜ் இடையே நடக்கும் விஷயம்.. சுவாரஸ்ய வீடியோ!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் "தேஜா வூ"வை போன்று சஞ்சு சாம்சனுக்கு நடந்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IND vs WI: Sanju Samson-ன் செம Diving! Final Over-ல் Boundary Save செய்தார் | *Cricket

இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று கைப்பற்றியுள்ளது.

இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசம், 2 விக்கெட் வித்தியாசம் என த்ரில் வெற்றிகளை பெற்றது.

தோனியின் மெகா சாதனை முறியடிப்பு.. ஒரே போட்டியில் தகர்த்து காட்டிய அக்‌ஷர் பட்டேல்..ரசிகர்கள் வியப்புதோனியின் மெகா சாதனை முறியடிப்பு.. ஒரே போட்டியில் தகர்த்து காட்டிய அக்‌ஷர் பட்டேல்..ரசிகர்கள் வியப்பு

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

இந்திய அணியின் 2 வெற்றிக்கும் கடைசி நேரத்தில் சஞ்சு சாம்சன் செய்த உதவிகள் தான் காரணமாக இருந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி 12 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரில் சிராஜ் வீசிய ஒரு வைட்-ஐ சூப்பர் மேன் போன்று டைவ் அடித்து சஞ்சு சாம்சன் தடுத்திருந்தார். அது மட்டும் பவுண்டரி சென்றிருந்தால் இந்தியா தோல்வி பெற்றிருக்கும்.

மீண்டும் அதே சம்பவம்

மீண்டும் அதே சம்பவம்

இதே சம்பவம் அச்சு அசலாக 2வது ஒருநாள் போட்டியிலும் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ஓவர்களில் 301 ரன்களை அடித்துவிட்டது. முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 2 வைட்கள் போனது. கடைசி ஓவரில் சிராஜ் சொதப்புவார் என கணித்திருந்த சாம்சன், 2 வைட்களையும் டைவ் அடித்து காப்பாற்றினார்.

சாம்சனின் ரியாக்‌ஷன்

சாம்சனின் ரியாக்‌ஷன்

அச்சு அசலாக முதல் போட்டியில் நடந்ததை போன்றே கடைசி ஓவரில் சிராஜின் வைட், அதே போன்று சஞ்சு சாம்சன் டைவிங் என இருந்தது. இதனை களத்தில் இருந்த வர்ணனையாளர்கள் கூற, சஞ்சு சாம்சன் சிரித்துக்கொண்டே சென்றார். இந்த போட்டியில் இந்திய அணி 49.4 வது ஓவரில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் மட்டும் தடுக்கவில்லை என்றால் இலக்கு அதிகமாகி இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தல் பேட்டிங்

விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சஞ்சு சாம்சன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்திய அணி 78 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, சஞ்சு சாம்சன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். 51 பந்துகளை சந்தித்த அவர் 54 ரன்களை குவித்தார். 3வது போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 26, 2022, 20:10 [IST]
Other articles published on Jul 26, 2022
English summary
sanju samson wicket keeping in india vs west indies ODI ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் ) வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் செய்த விஷயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X