For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அந்த ஒரு ஓவர்" அதிர்ச்சியில் உறைந்த வெஸ்ட் இண்டீஸ்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய போலண்ட்!

அடிலெய்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் போலண்ட், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்ய வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.

ஆட்டத்தை பிடிச்சிட்டோம்.. டெஸ்ட் தொடரில் கலக்குவோம்.. பாடம் கற்று கொண்டதாக கேஎல் ராகுல் கருத்து ஆட்டத்தை பிடிச்சிட்டோம்.. டெஸ்ட் தொடரில் கலக்குவோம்.. பாடம் கற்று கொண்டதாக கேஎல் ராகுல் கருத்து

2ம் நாள் முடிவு

2ம் நாள் முடிவு

இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் லபுஷேன் 163 ரன்களும், டிராவிஸ் ஹெட் 175 ரன்களும் குவித்ததால், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 511 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் சேர்த்தது.

வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்

பின்னர் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிலிப் மட்டும் 43 ரன்கள் சேர்த்தார். மீதமிருந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 3 விக்கெட்டுகளையும், நெசர் மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

297 ரன்கள் முன்னிலை

297 ரன்கள் முன்னிலை

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 297 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விளையாடியதால், வேகமாக ரன்கள் சேர்ந்தன. வார்னர் 45, கவாஜா 28, லபுஷேன் 31, ஸ்மித் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 31 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 497 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போலண்ட் அசத்தல்

போலண்ட் அசத்தல்

மூன்றாம் நாளின் கடைசி செஷனில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக தொடங்கினர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் நிதானம் ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் காணாமல் போனது. ஆட்டத்தின் 6வது ஓவரை வீசிய போலண்ட், ஒரே ஓவரில் ரன்கள் விட்டுக்கொடுக்காமல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவரது பந்துவீச்சில் கேப்டன் பிராத்வெய்ட் 3, ப்ரூக்ஸ் மற்றும் பிளாக்வுட் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

4ம் நாளில் வெற்றி உறுதி

4ம் நாளில் வெற்றி உறுதி

முதல் இன்னிங்ஸில் போலாண்ட் பந்துவீச்சில் எந்த விக்கெட்டுகள் வீழ்த்தாத நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஸ்டார்க் பந்துவீச்சில் சந்தர்பால் 17 ரன்களில் ஆட்டமிழக்க, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் நான்காம் நாளின் சில மணி நேரங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, December 10, 2022, 20:20 [IST]
Other articles published on Dec 10, 2022
English summary
In the second Test match against the West Indies team, Australian player Boland was amazing by taking 3 wickets in one over.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X