For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ஸ்பின் பௌலிங்!! ஷேன் வார்னேவிடம் பாராட்டு வாங்கிய ஏழு வயது காஷ்மிரி சிறுவன்

ஜம்மு : ஏழு வயது காஷ்மிரி சிறுவனின் சுழற்பந்துவீச்சு வார்னேவின் சிறந்த பந்துவீச்சான "பால் ஆஃப் தி சென்சுரி"யை நினைவு படுத்தும் வகையில் அமைந்தது.

அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றி மக்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஷேன் வார்னேவும் சிறப்பான பந்தை வீசிய ஏழு வயது காஷ்மிரி சிறுவனை பாராட்டி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

அது என்ன “பால் ஆஃப் தி சென்சுரி”?

அது என்ன “பால் ஆஃப் தி சென்சுரி”?

1993இல் ஷேன் வார்னே, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மைக் கேட்டிங்கை பௌல்டு அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகி, மிகப் பெரிய அளவில் சுழன்று, திசை மாறி ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது. இத்தனை தூரம் பந்து திசை மாறி சென்றதால், "நூற்றாண்டின் சிறந்த பந்து" என்ற பொருளில் அது "பால் ஆஃப் தி சென்சுரி" என அழைக்கப்பட்டது.

காஷ்மிரி சிறுவன் கூக்ளி

ஏழு வயது காஷ்மிரி சிறுவன் மற்ற சிறுவர்களோடு ஆடிய போட்டி ஒன்றில் சுழற்பந்து வீசினான். அந்த பந்து ஸ்டம்ப்களுக்கு சில அடி தூரம் தள்ளி பிட்ச் ஆகி, திசை மாறிச் சென்று ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. அந்த சிறுவன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான்.

ஷேன் வார்னேவுக்கு போட்டி

ஷேன் வார்னேவுக்கு போட்டி

இந்த வீடியோவை பகிர்ந்த ஒருவர், "ஷேன் வார்னே உங்களுக்கு போட்டி வந்துவிட்டது. இந்த சிறுவனை பாருங்கள்" என பதிவிட்டு இருந்தார். அதன் கீழே ஏராளமான மக்கள் அந்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டு இருந்தார்கள்.

ஷேன் வார்னே பாராட்டு

இதையெல்லாம் ஷேன் வார்னே எங்கே பார்க்கப் போகிறார் எனப் பார்த்தால், ஷேன் வார்னே அந்த வீடியோவுக்கு பதில் அளித்தார். "இது மிக அற்புதமாக உள்ளது" என பாராட்டி இருந்தார்.

Story first published: Tuesday, December 11, 2018, 16:19 [IST]
Other articles published on Dec 11, 2018
English summary
Shane Warne impressed by a seven year old Kashmiri boy’s Ball of the century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X