For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோசமா பந்து வீசு.. மேட்ச் டிரா பண்ணு.. அரை மணி நேரத்துல 2 லட்சம் டாலர் வந்து சேரும்

டெல்லி : ஷேன் வார்னே தான் கிரிக்கெட் ஆடிய காலத்திலேயே சர்ச்சைகளுக்கு பேர் போனவர்.

ஷேன் வார்னே திறமை வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதே சமயம், பல சர்ச்சைகளை அவரே இழுத்துக் கொண்டார் என்பதும் உண்மை.

தற்போது, தன் வாழ்க்கை வரலாற்றை "நோ ஸ்பின்" என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருக்கும் ஷேன் வார்னே, பல சர்ச்சைகளை மீண்டும் கிளறி இருக்கிறார்.

மேட்ச் பிக்ஸிங்குக்கு தூண்டிய பாக். வீரர்

மேட்ச் பிக்ஸிங்குக்கு தூண்டிய பாக். வீரர்

என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு இந்த புத்தகம் தொடர்பாக பேட்டி அளித்த வார்னே, பாகிஸ்தான் வீரர் ஒருவர் மேட்ச் பிக்ஸிங் செய்தால் தனக்கு பணம் கொடுப்பதாக கூறிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அரை மணி நேரத்தில் பணம்

அரை மணி நேரத்தில் பணம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் கராச்சி போட்டியில் ஆடிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சலீம் மாலிக் வார்னேவிடம் போட்டியை டிரா செய்யுமாறும், பந்துகளை ஆஃப் - ஸ்டம்புக்கு வெளியே வீசுமாறும் கூறியுள்ளார். அப்படி செய்தால் அடுத்த அரை மணி நேரத்தில் அறையில் சுமார் 2,00,000 டாலர்கள் இருக்கும் என உறுதி கூறியுள்ளார்.

சலீம் மாலிக் தடை

சலீம் மாலிக் தடை

வார்னே குறிப்பிடும் இந்த சம்பவம் நடைபெற்ற அதே நேரத்தில் வார்னே, மார்க் வாஹ், சலீம் மாலிக் ஆகியோர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினர். இதில் சலீம் மாலிக் தடை செய்யப்பட்டார். அதன் பின் விவரங்களை தான் இப்போது ஷேன் வார்னே கூறியுள்ளார்.

5000 டாலரால் சர்ச்சை

5000 டாலரால் சர்ச்சை

அடுத்து இலங்கை புக்கி ஒருவரிடம் பணம் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு பற்றியும் பேசியுள்ளார் வார்னே. சூதாட்ட விளையாட்டான கேசினோவில் வார்னே 5000 டாலர்கள் இழந்துள்ளார். அப்போது அருகே இருந்த மார்க் வாஹ்வின் நண்பர் ஒருவர் 5000 டாலர்களை கொடுக்க முன்வந்துள்ளார். அதை வார்னே மறுத்துள்ளார். இது மட்டுமே நடந்தது என கூறியுள்ளார் வார்னே.

Story first published: Friday, October 12, 2018, 14:58 [IST]
Other articles published on Oct 12, 2018
English summary
Shane Warne Revealed about Pakistan’s Saleem Malik offered 2,00,000 dollars
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X