For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன்

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் .

பாகிஸ்தானுக்கு எதிராக 2005-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிட்னியில் ஷேன் வாட்சன் அறிமுகமானார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 3731 ரன்களை 35 ரன்கள் என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ளார்.

அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 176. 75 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 3 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 45 கேட்ச்களை ஷேன் வாட்சன் பிடித்துள்ளார்.

மிட்செல்லிடம் இழந்தார்...

மிட்செல்லிடம் இழந்தார்...

சமீபத்தில் ஆஸ்திரேலியா தோற்ற ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு மிட்செல் மார்ஷிடம் தன் இடத்தை இழந்தார் ஷேன் வாட்சன்.

அதிகமுறை எல்.பி...

அதிகமுறை எல்.பி...

ஷேன் வாட்சனின் முக்கியப் பிரச்சினை எல்.பி.டபிள்யூ தான். இவர் அதிகம் முறை எல்.பி.ஆகியுள்ளார்.

டெஸ்ட் வாழ்க்கை...

டெஸ்ட் வாழ்க்கை...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை பொறுத்தவரையில் குறைந்த ஸ்கோரில் ஒரே முறையில் அதிகமுறை ஆட்டம் இழந்தால் அவர்களது கேரியர் முடிவுக்கு வருவது வழக்கம், அந்த வகையில் இவரது டெஸ்ட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.

அறிவிப்பு...

அறிவிப்பு...

ஷேன் வாட்சனின் இந்த முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது டிவிட்டரில் நேற்று அறிவித்தது. இவரது இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

இதுவே சரியான தருணம்...

இதுவே சரியான தருணம்...

"டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் சவாலாகத் திகழும் அளவுக்கு என்னிடம் மனோபலம் இல்லை. உத்தி ரீதியாகவும் வலுவாக இல்லை, எனவே ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்பதை முடிவு செய்தேன்" என தன் ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார் ஷேன் வாட்சன்.

Story first published: Monday, September 7, 2015, 9:24 [IST]
Other articles published on Sep 7, 2015
English summary
Veteran batsman Shane Watson has announced he is retiring from test cricket effective immediately.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X