For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோப்பையை கூட ஷேர் பண்ணிக்கலாம்... தப்பில்ல... சூப்பர் ஓவர் மட்டும் வேணாம்... பிளீஸ்

டெல்லி : 50 ஓவர்கள் கிரிக்கெட்டில் சூப்பர் ஓவருக்கு அவசியமில்லை என்று நியூசிலாந்து சீனியர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

2011 World cup Finals Match Fixing issue..பரபர விசாரணை

ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே 100 ஓவர்களுக்கு விளையாடும் வீரர்கள், மீண்டும் சூப்பர் ஓவரில் விளையாடுவது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

டி20 போட்டிகளில் சூப்பர் ஓவர் வைப்பதில் தவறில்லை என்றும் கால்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வைப்பது போல அதில் சூப்பர் ஓவர் வைக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்சுடன் கவுதம் கம்பீரின் பார்ட்னர்ஷிப் டெல்லி கேபிடல்சுடன் கவுதம் கம்பீரின் பார்ட்னர்ஷிப்

சூப்பர் ஓவர் குறித்து ராஸ் டெய்லர்

சூப்பர் ஓவர் குறித்து ராஸ் டெய்லர்

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் போட்டி டிரா ஆகும்பட்சத்தில் சூப்பர் ஓவர் வைக்கப்படுகிறது. ஒரு ஓவரில் விளையாடும் வீரர்கள் அந்த போட்டியின் வெற்றியை நிர்ணயிக்கும்வகையில் இது அமைந்துள்ளது. ஆனால் நியூசிலாந்து அணிக்கும் சூப்பர் ஓவருக்கும் எப்போதுமே ஒத்து வருவதில்லை. இதுவரை 8 முறை அவ்வாறு விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 7 முறை தோல்வியையே கண்டுள்ளது.

சூப்பர் ஓவருக்கு தேவையில்லை

சூப்பர் ஓவருக்கு தேவையில்லை

சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடிய டி20 போட்டியிலும் சூப்பர் ஓவர் வைக்கும் சூழல் ஏற்பட்ட போது நியூசிலாந்து இந்தியாவிடம் தோல்வியையே தழுவியது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சூப்பர் ஓவருக்கான தேவையில்லை என்று நியூசிலாந்தின் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஓவர் வைக்கப்படலாம்

சூப்பர் ஓவர் வைக்கப்படலாம்

குறுகிய ஓவர்களில் விளையாடப்படும் டி20 போட்டிகளில் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் வைக்கப்படுவது போல சூப்பர் ஓவர் வைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ள ராஸ் டெய்லர், ஆனால் ஒருநாள் போட்டிகளில் 100 ஓவர்களை முடித்துவிட்டு போட்டி டை ஆகும்நிலையில், மீண்டும் சூப்பர் ஓவரை வைப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

கோப்பையை பகிர்ந்தளிக்கலாம்

கோப்பையை பகிர்ந்தளிக்கலாம்

ஒருநாள் போட்டிகளில் சூப்பர் ஓவரை வைப்பதை காட்டிலும், கோப்பையை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிப்பது நல்ல பலனை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த போட்டியை முடிக்க முயற்சி செய்யலாம் என்றும் டெய்லர் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Friday, June 26, 2020, 13:47 [IST]
Other articles published on Jun 26, 2020
English summary
One over across 50 overs or 20 overs is tough to swallow -Taylor
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X