For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மாவை முந்தினார் ஷிகர் தவான்.. ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை தொட வாய்ப்பு.. விவரம்

ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தற்காலிக கேப்டன் ஷிகர் தவான் புதிய சாதனை எட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் 2010 ஆம் ஆண்டு அறிமுகமானார்.அதிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை ஷிகர் தவான் அணிக்கு உள்ளேயும் வெளியேவும் என வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.

இதன் பிறகு 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு தான் ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார்.

நியூசிலாந்துக்கு எமனாக மாறிய பாகிஸ்தான்.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. கடைசி நேரத்தில் கூடிய பலம்! நியூசிலாந்துக்கு எமனாக மாறிய பாகிஸ்தான்.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. கடைசி நேரத்தில் கூடிய பலம்!

ஷிகர் தவான் நிலை

ஷிகர் தவான் நிலை

இதேபோன்று ரோகித் சர்மா , தவானை விட மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்காக அறிமுகமானார். அவரும் சாம்பியன்ஸ் கோப்பை 2013 ஆம் ஆண்டு தொடருக்கு பிறகு தான் நிரந்தர இடத்தை பிடித்தார் .இதில் ஷிகர் தவான் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் காயம் காரணமாக பாதியில் வெளியேறியதால் அதன் பிறகு தவானுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

12 ஆயிரம் ரன்கள்

12 ஆயிரம் ரன்கள்

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு ஷிகர் தவான் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர்கள் இல்லாத அணியில் ஷிகர் தவான், கேப்டன் பதவி அவ்வப்போது வழங்கப்படுகிறது.இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் 47 ரன்களை கடந்தால் list- A கிரிக்கெட் எனப்படும் அனைத்து விதமான ஒரு நாள் போட்டிகளிலும் 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்று பெருமையை பெறுவார்.

சர்வதேச கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்

296 லிஸ்ட் ஏ கிரிக்கெட் ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடிய ஷிகர் தவான் தற்போது 11953ல ரன்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்களும் 66 அரை சதங்களும் அடங்கும். தவான் தனது முதல் லிஸ்டி ஏ ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 2004 ஆம் ஆண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் 161 போட்டியில் விளையாடி 6672 ரன்கள் அடித்திருக்கிறார்.

முதலிடம் யார்?

முதலிடம் யார்?

தவானுக்கு முன்பே விளையாடி வரும் ரோகித் சர்மா அனைத்து விதமான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 11 ஆயிரத்து 618 அன்று அடித்திருக்கிறார் . இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் கிராஹம் கெளவுச் 22,211 ரன்களுடன் முதலிடத்திலும் 22059 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் ஜிம்பாப்வே வீரர் கிரேம் ஹிகும் சச்சின் டெண்டுல்கர் 21999 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.( List A cricket - அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டி, First class cricket என்பது அனைத்து விதமான அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர், சர்வதேச டெஸ்ட் போட்டி)

Story first published: Thursday, November 24, 2022, 18:41 [IST]
Other articles published on Nov 24, 2022
English summary
Shikhar Dhawan is all set to reach new milestone in list a cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X