For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லோரும் பணம் இல்லாமல் சிக்குவோம்.. இப்போதே சம்பாதித்தால் தான் உண்டு.. பிரபலம் ஷாக் பேச்சு!

இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் என சோயப் அக்தர் கூறியது சாத்தியமே அல்ல என முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கூறி இருந்தார்.

Recommended Video

Shoaib Akhtar says Dhoni Should Have Retired After The 2019 WC

இந்த நிலையில், தான் கூறியதை கபில் தேவ் சரியாக புரிந்து கொள்ளவில்லை எனவும், நாம் அனைவரும் பொருளாதார ரீதியாக சிக்கிக் கொள்ள இருக்கிறோம் எனவும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார் சோயப் அக்தர்.

விரைவில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கும் என சோயப் அக்தர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல்ல கூட ரசிகர்கள் இல்லாம நடத்திடலாம்... டி20 உலக கோப்பை சாத்தியப்படாதுஐபிஎல்ல கூட ரசிகர்கள் இல்லாம நடத்திடலாம்... டி20 உலக கோப்பை சாத்தியப்படாது

கிரிக்கெட் போட்டி நடத்தலாம்

கிரிக்கெட் போட்டி நடத்தலாம்

கடந்த சில நாட்கள் முன் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கபட்டு இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து கிரிக்கெட் போட்டி நடத்தி பணம் திரட்ட வேண்டும். அதை கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

சாத்தியமே அல்ல

சாத்தியமே அல்ல

சோயப் அக்தர் பேச்சுக்கு இந்தியாவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ், கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் சாத்தியமே அல்ல என கூறி இருந்தார்.

பணம் தேவை இல்லை

பணம் தேவை இல்லை

மேலும், இந்தியாவுக்கு பணம் தேவை இல்லை என்றும், இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும், பிசிசிஐ தற்போது பெரிய தொகை கொடுத்துள்ளது. மீண்டும் தேவை ஏற்பட்டால் பிசிசிஐ அரசுக்கு நிவாரண நிதி அளிக்கும் நிலையில் தான் உள்ளது என பதிலடி கொடுத்தார்.

அக்தர் விளக்கம்

அக்தர் விளக்கம்

கபில் தேவ் தன் கருத்தை எதிர்த்து பதிலடி கொடுத்த நிலையில், தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் சோயப் அக்தர். கபில் தேவ் தான் என்ன சொல்ல வந்தேன் என்பதை புரிந்து கொள்ளவில்லை. நாம் அனைவரும் பொருளாதார ரீதியாக சிக்கிக் கொள்ள இருக்கிறோம் என கூறி உள்ளார்.

வருமானம்

வருமானம்

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் தீவிரம் அடையாத இந்த நேரத்தில் தான் நாம் முன்னெடுத்து, வருமானம் ஈட்ட வேண்டும். உலக ரசிகர்கள் இந்த ஒரு போட்டியால் ஈர்க்கப்படுவார்கள் என இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பணமாக்கலாம் என கூறினார்.

எல்லோருக்கும் பணம் வேண்டும்

எல்லோருக்கும் பணம் வேண்டும்

கபில் தேவ் தனக்கு பணம் வேண்டாம் என்றார். நிச்சயம் அவருக்கு பணம் வேண்டாம். ஆனால், மற்ற எல்லோருக்கும் பணம் வேண்டும். இந்த யோசனை விரைவில் செயல்படுத்தப்படும் என நான் நினைக்கிறேன் எனவும் சோயப் அக்தர் கூறி உள்ளார்.

இந்தியாவை நன்றாக தெரியும்

இந்தியாவை நன்றாக தெரியும்

எனக்கு இம்ரான் கானை விட இந்தியாவைப் பற்றி நன்றாகவே தெரியும் என நான் கூறி உள்ளேன். அங்கே நான் பல இடங்களுக்கு சென்று, பலரையும் சந்தித்துள்ளேன். இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன் என்றார் அக்தர்.

வருத்தம்

வருத்தம்

நம் நாடுகளில் வறுமை உள்ளது. மக்கள் பாதிக்கப்படும் போது நான் வருத்தம் அடைகிறேன். ஒரு மனிதனாக, முஸ்லீமாக முடிந்த அளவு உதவி செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது எனவும் கூறினார் சோயப் அக்தர். அக்தர் கூறுவது போல இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடத்த முடியுமா? பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Monday, April 13, 2020, 15:39 [IST]
Other articles published on Apr 13, 2020
English summary
Shoaib Akhtar says everyone will be trapped economically as a reply to Kapil Dev, who oppose the idea of conducting India - Pakistan ODI sereis to collect Coronavirus relief fund.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X