கோலி, ரோகித்துக்கு இது தான் கடைசி உலகக்கோப்பை? சோயிப் அக்தர் கொடுத்த எச்சரிக்கை.. திகிலில் ரசிகர்கள்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோலி, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி (341 ரன்கள்) , ரோகித் சர்மா (268 ரன்கள்) என இருவரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.

இதனால் இருவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தது. கோலி 3 முறை கோல்டன் டக்கும், ரோகித் 11 பந்தகளில் 2 ரன்களும் அடித்து ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தனர்.

சச்சின் எடுத்த முடிவு

சச்சின் எடுத்த முடிவு

சேவாக்கை தவிர சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் எல்லாம் தங்களது வயதை காரணம் காட்டி டி20 கோப்பை தொடரில் விளையாடவில்லை. காரணம், தங்களது வயதை காட்டி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக முடிவை எடுத்தனர். தற்போது, விராட் கோலியும், ரோகித் சர்மாவும் அப்படி ஒரு நிலையில் தான் உள்ளனர்.

கடைசி உலகக்கோப்பை?

கடைசி உலகக்கோப்பை?

இது குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அளித்துள்ள பேட்டியில், விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இது தான் கடைசி உலகக்கோப்பை அல்லது ஐபிஎல் தொடரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என இருவருக்கும் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

சச்சினுக்கும் இப்படி தான்

சச்சினுக்கும் இப்படி தான்

இந்த அழுத்தம் கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் மேலும் அதிகரிக்கும். எடுத்துக் காட்டாக சச்சினிடம் எப்போதும் சதம் அடிக்க முடியாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உங்களுடைய கிரிக்கெட் தொடரின் இறுதி காலத்தில் அனைத்து போட்டியிலும் ரன் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

கடவுளுக்கு தான் தெரியும்

கடவுளுக்கு தான் தெரியும்

உங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும். விராட் கோலிக்கு என்ன நடக்கப் போகிறது என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் என் விருப்பம் சர்வதேச கிரிக்கெட்டில் 110 சதம் அடிக்க வேண்டும் என்பது தான். தற்போது அவருடைய தன்னம்பிக்கை உத்வேகம் குறைந்து இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் போது கோலியின் உத்வேகம் அதிகரிக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shoaib akthar feels there is mounting pressure for kohli and rohit கோலி, ரோகித்துக்கு இது தான் கடைசி உலகக்கோப்பை? சோயிப் அக்தர் கொடுத்த எச்சரிக்கை.. திகிலில் ரசிகர்கள்
Story first published: Saturday, June 4, 2022, 8:55 [IST]
Other articles published on Jun 4, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X