For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்மான் கில்லின் இரட்டை சதம்.. நியூசிலாந்தை மிரள வைத்த இந்திய அணி.. 350 ரன்கள் இலக்கு

ஐதராபாத் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 350 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய வீரர் சுப்மான் கில் 208 ரன்களை விளாசினார்.

இந்தப் போட்டியின் மூலம் சுப்மான் கில் அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிளேயிங் லெவனில் சூர்யகுமார், ஷர்துல் தாக்கூர் மற்றும் இஷான் கிஷனை ரோகித் சர்மா சேர்த்தார்.

நியூசி.க்கு எதிராக சுப்மான் கில் சதம்.. கோலி, ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு.. புதிய நாயகனா கில் ? நியூசி.க்கு எதிராக சுப்மான் கில் சதம்.. கோலி, ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு.. புதிய நாயகனா கில் ?

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

தொடக்கம் முதலே கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ரோகித் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 8 ரன்களில் மிட்செல் சாண்ட்னர் பந்தில் போல்ட் ஆனார்.இரட்டை சதம் அடித்த பிறகு ஒருநாள் போட்டிக்கு திரும்பிய இஷான் கிஷன் 5 ரன்களில் வெளியேறினார்.

சுப்மான் கில் சதம்

சுப்மான் கில் சதம்

ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுமுனையில் சுப்மான் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி மீது நெருக்கடி இல்லாமல் சுப்மான் கில் பார்த்து கொண்டார். இதன் மூலம் 88 பந்துகளில் சுப்மான் கில் சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இது அவருடைய தொடர்ச்சியான 2வது சதமாகும்.

முக்கிய விக்கெட்

முக்கிய விக்கெட்

இதனையடுத்து ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து சுப்மான் கில், பார்ட்னர்ஷிப் அமைத்தார். முக்கிய கட்டத்தில் ஹர்திக் பாண்டியா நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வாசிங்டன் சுந்தர் 12 ரன்களில் வெளியேற, இந்திய அணியில் பவுண்டரிகள் 4 ஓவருக்கு மேல் வறண்டது. எனினும் சுப்மான் கில் 122 பந்துகளில் 150 ரன்களை கடந்ததும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சுப்மான் கில் இரட்டை சதம்

சுப்மான் கில் இரட்டை சதம்

அதன் பிறகு எதிர்கொண்ட பந்துகளை எல்லாம் சுப்மான் கில் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம் 145 பந்துகளை எதிர்கொண்ட சுப்மான் கில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற இஷான் கிஷனின் சாதனையை சுப்மான் கில் முறியடித்தார். 208 ரன்களில் கில் ஆட்டமிழக்க, 19 பவுண்டரிகளையும், 9 சிக்சர்களையும் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Wednesday, January 18, 2023, 17:45 [IST]
Other articles published on Jan 18, 2023
English summary
Shubman gill double century puts India in to pole osition vs NZ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X