பரபர டி20 போட்டி.. வரலாறு படைத்து அதிர வைத்த சிங்கப்பூர் கிரிக்கெட் அணி.. பின்னணியில் தமிழர்கள்!

பிழைப்பு தேடி சென்ற தமிழரால் பெருமையடைந்த சிங்கப்பூர்

சிங்கப்பூர் : டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி சிங்கப்பூர் கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வில் சில தமிழர்களுக்கும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் முழு நேர உறுப்பினர் நாட்டை முதன் முறையாக வீழ்த்தி உள்ளது சிங்கப்பூர் அணி. அந்த நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் இது முக்கிய மைல்கல் சாதனை ஆகும்.

முத்தரப்பு தொடர்

முத்தரப்பு தொடர்

சிங்கப்பூர் நாட்டில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரில் நேபாளம், ஜிம்பாப்வே மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதி வருகின்றன. இந்த தொடரில் நேற்று சிங்கப்பூர் - ஜிம்பாப்வே அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது.

18 ஓவர் போட்டி

18 ஓவர் போட்டி

மழையால் போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதலில் சிங்கப்பூர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் ரோகன் - சந்திரமோகன் அசத்தல் துவக்கம் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர்.

சிங்கப்பூர் அசத்தல் பேட்டிங்

சிங்கப்பூர் அசத்தல் பேட்டிங்

ரோகன் 39, சந்திரமோகன் 23, டேவிட் 41, மன்ப்ரீத் சிங் 41 ரன்கள் எடுத்தனர். ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காவிட்டாலும் சிங்கப்பூர் அணி 18 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது.

ஜிம்பாப்வே சேஸிங்

ஜிம்பாப்வே சேஸிங்

சற்றே கடினமான இலக்கை நோக்கி சேஸிங் செய்தது ஜிம்பாப்வே. துவக்க வீரர் சகப்வா 19 பந்துகளில் 48 ரன்கள் குவித்து மிரட்டினார். மூன்றாம், நான்காம் வரிசை பேட்ஸ்மேன்கள் வில்லியம்ஸ் 66, முடோம்போட்ஸி 32 ரன்கள் எடுத்தனர்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின் சிங்கப்பூர் அணி தடுமாறத் துவங்கியது. 16வது ஓவர் முதல் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. அதனால், போட்டி கடைசி ஓவர் வரை சென்றது.

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், ஜானக் பிரகாஷ் அபாரமாக பந்து வீசு ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்தார். சிங்கப்பூர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மைல்கல் சாதனை

மைல்கல் சாதனை

இந்தப் போட்டியின் வெற்றி மூலம் சிங்கப்பூர் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஐசிசியின் முழு நேர உறுப்பினர் நாடு ஒன்றை வீழ்த்திய சாதனையை செய்தது அந்த அணி.

தமிழக வீரர்கள்

தமிழக வீரர்கள்

சிங்கப்பூர் அணி என்று கூறிக் கொண்டாலும் அந்த அணியில் பெரும்பாலும் இந்தியர்களே உள்ளனர். அதிலும், தமிழர்கள் எண்ணிக்கை அதிகம் தான். ரோகன் ரங்கராஜன், சந்திரமோகன், விஜயகுமார், பாஸ்கரன் என பல தமிழர்கள் அந்த அணியில் ஆடி வருகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Singapore beat Zimbabwe in a T20 match to register maiden victory against a ICC full member nation. This milestone achieved during the Singapore T20 Tri-series between Zimbabwe, Nepal and Singapore.
Story first published: Monday, September 30, 2019, 12:10 [IST]
Other articles published on Sep 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X