For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

20 ஓவர்கள்... 5 விக்கெட்டுகள்... மெய்டன் ஓவர்கள்... டாட் பந்துகள்... குடுமி நாயகன் அதிரடி!

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஆடி முடித்துள்ளது. இந்தியா ஆடி வருகிறது.

இந்த இன்னிங்சில் முகமது சிராஜ் 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் குறைப்புக்கு காரணமாக அமைந்துள்ளார்.

வெளிப்பட்ட ஆக்ரோஷம்.. பறந்த பவுன்சர்கள்..இனவெறி தாக்குதல்களுக்கு.. பவுலிங் மூலம் பதிலடி தந்த சிராஜ் வெளிப்பட்ட ஆக்ரோஷம்.. பறந்த பவுன்சர்கள்..இனவெறி தாக்குதல்களுக்கு.. பவுலிங் மூலம் பதிலடி தந்த சிராஜ்

மேலும் ஷமி, அஸ்வின் உள்ளிட்ட முக்கிய பௌலர்கள் இந்த போட்டியில் இடம்பெறாத நிலையில் அணியின் பௌலிங் அட்டாக்கை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.

இறுதி டெஸ்ட் போட்டி

இறுதி டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்மூலம் சர்வதேச அளவிலான தனது டெஸ்ட் பயணத்தை துவங்கியுள்ள முகமது சிராஜ் தன்னுடைய பௌலிங் மூலம் அனைவரையும் மிரட்டி வருகிறார்.

5 விக்கெட்டுகள்

5 விக்கெட்டுகள்

குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்த சிராஜ், தற்போது இரண்டாவது இன்னிங்சில் 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அதிகமான ரன்களை குவிக்க முடியாமல் திணறியது.

வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு

வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு

முக்கியமாக ஆஸ்திரேலிய ரன் மெஷின் லாபுஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹாசல்வுட் ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளார். 75 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 2வது இன்னிங்சை முடித்துள்ளதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

5 விக்கெட்டுகள்

5 விக்கெட்டுகள்

19.5 ஓவர்களை போட்டு, 73 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சிராஜ். மேலும் மெய்டன் ஓவர்கள் டாட் பால்கள் என ஆஸ்திரேலிய அணியை திணறடித்துள்ளார். பும்ரா உள்ளிட்ட வீரர்களிடம் காணப்படும் தலைமை பண்புகள் அனைத்தும் முதல் இரண்டு போட்டிகளிலேயே அவர் வெளிப்படுததியுள்ளார்.

Story first published: Monday, January 18, 2021, 15:21 [IST]
Other articles published on Jan 18, 2021
English summary
Absence of all the regulars Siraj got the wicket of Warner, Smith, Labuschagne
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X