For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேவதையின் ருத்ரதாண்டவம்.. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டம்.. இங்கிலாந்துக்கு பதிலடி தந்த இந்தியா

டெர்பி: இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Recommended Video

Harmanpreet Kaur-ன் Stunning 143 Runs! England-ல் India-வின் Historic Win | Aanee's Appeal

இதில், முதல் டி20 போட்டியில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

இந்த நிலையில், வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இங்கிலாந்து அணி, இந்தியாவுடன் 2வது டி20 போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது.

அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் தெரியுமா? 3 முக்கிய காரணங்கள்.. தாக்கத்தை ஏற்படுத்துவாரா ?அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் தெரியுமா? 3 முக்கிய காரணங்கள்.. தாக்கத்தை ஏற்படுத்துவாரா ?

தடுமாறிய இங்கிலாந்து

தடுமாறிய இங்கிலாந்து

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சொபியா 5 ரன்களிலும், டேனி வியாட் 6 ரன்களிலும், அலைஸ் கேப்சி 4 ரன்களிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 16 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

54 ரன்களுக்கு 5 விக்கெட்

54 ரன்களுக்கு 5 விக்கெட்

இதனையடுத்து ஏமி ஜோன்ஸ், பிராமி ஸ்மித் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி எடுத்தனர். ஆனால், இவ்விருவர்களையும் ரானா ஒரு ஓவர் இடைவெளியில் அடுத்தடுத்து வீழ்த்த இங்கிலாந்து அணி 54 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளையும் இழந்து விளையாடியது.

17 வயது வீராங்கனை

17 வயது வீராங்கனை

இறுதியில், இங்கிலாந்து அணியின் 17 வயதே ஆள வீராங்கனை கெம்ப் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 142 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.

ஸ்மிருதி மந்தனா அபாரம்

ஸ்மிருதி மந்தனா அபாரம்

தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதற அடித்தார். 53 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஸ்மிருதி மந்தனா 79 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். ஹர்மன்பிரித் கவுர் 22 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, September 14, 2022, 16:09 [IST]
Other articles published on Sep 14, 2022
English summary
Smriti Mandhana brilliant innings made India beat England in 2nd t2oI தேவதையின் ருத்ரதாண்டவம்.. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டம்.. இங்கிலாந்துக்கு பதிலடி தந்த இந்தியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X