For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேட்ச் பிக்சிங்.. தென்னாப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை!

By Karthikeyan

ஜோகன்ஸ்பர்க்: மேட்ச் பிக்சிங் புகாரை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் லோன்வாபோ டிசோபே. கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரேம்ஸ்லாம் டி20 போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியதில் டிசோபே மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதியானது.

South African player banned for 8 years in corruption charges

இதையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகள் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. டிசோபே மீது பத்து வழக்குகள் உள்ளன. ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட முயன்றது, ஸ்பாட் பிக்சிங்கு தொடர்பு கொண்டவர்கள் குறித்த விவரங்களை அளிக்காதது, விசாரணைக்கு ஆஜராகமல் மறுத்தது, விசாரணையை இழுத்தடித்து தாமதப்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு மேட்ச் பிக்சிங் புகார் புதிது இல்லை. 2000மாவது ஆண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த தென் ஆப்பிரிக்க அணியின், கேப்டன் குரோன்யே மீது மேட்ச் பிக்சிங் புகார் எழுந்திருந்தது. ஆனால் விசாரணை நடைபெற்ற நிலையில், 2002ல் நடந்த விமான விபத்தில் குரோன்யே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 2016ம் ஆண்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 வீரர்களுக்கு 7-12 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதித்திருந்தது.

Story first published: Wednesday, July 12, 2017, 18:23 [IST]
Other articles published on Jul 12, 2017
English summary
South African fast bowler Lonwabo Tsotsobe has been banned for eight-years after Cricket South Africa (CSA) found him guilty of having breached several Anti-Corruption Code of Conduct.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X