For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்சர் சென்ற பந்து.. கடைசியில் பாய்ந்து கேட்ச் பிடித்த ராகுல் திரிபாதி.. அதிர்ச்சியில் பேட்ஸ்மேன்

புனே : இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அறிமுக ஆட்டத்தில் விளையாடிய ராகுல் திரிபாதி பாய்ந்து பிடித்த கேட்ச், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வென்றது.

இந்த நிலையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினர்.

 உயர்ந்த ஸ்கோர்

உயர்ந்த ஸ்கோர்

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி ஹர்சல் பட்டேலை நீக்கிவட்டு, ஆர்ஸ்தீப் சிங்கிற்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இலங்கை வீரர்கள் அவருடைய ஓவரில் அதிரடி காட்டினர். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

குசேல் மெண்டிஸ் அரைசதம்

குசேல் மெண்டிஸ் அரைசதம்

தொடக்க வீரர் குசேல் மெண்டிஸ் 27 பந்தில் அரைசதம் அடித்து, இந்திய வீரர்களுக்கு நாக் அவுட் பஞ்ச் கொடுத்தார். இந்த நிலையில் நிசாங்கா பொறுமையாக விளையாடி 33 ரைன்கள் எடுத்தார். நிசாங்காவின் ஸ்பெசலிட்டியே, முதலில் பொறமையாக விளையாடி பிறகு சிக்சர், பவுண்டரியை விளாசி பெரிய ஸ்கோரை அடிப்பது தான்.

நிசாங்கா பிளான்

நிசாங்கா பிளான்

கிட்ட தட்ட நமது கேஎல் ராகுல் போல என்று வைத்து கொள்ளுங்கள். இதனால் நிசாங்கா அடித்து ஆடுவார் என ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேலை பந்துவீச அழைத்தார். அப்போது அக்சர் பட்டேல் பந்தை சிக்சருக்கு நிசாங்கா தூக்கி அடித்தார். எப்போதும் பவுண்டரி லைனில் ஆள் இல்லாத இடத்தை பார்த்தே , பேட்ஸமேன்கள் அடிப்பார்கள். அது சிக்சர், பவுண்டரிக்கு நூற்றுக்கு 99 முறை சென்றுவிடும்.

அபார கேட்ச்

அபார கேட்ச்

ஆனால், ஒரு முறை எப்படியாவது ஃபில்டர்கள் ஓடி வந்து பிடித்துவிடுவார். அப்படி ஒரு முறை தான் இன்று நடந்தது. நிசாங்கா அடித்த பந்தை சரியாக கணித்து ஓடி வந்து அறிமுக வீரர் ராகுல் திரிபாதி கீழே விழுந்து கேட்ச் பிடித்தார். நல்ல வேளையாக பவுண்டரி லைனில் கை, காலில் ஏதும் படவில்லை. இதனை பார்த்த உடன் அக்சர் பட்டேலும், ஹர்திக் பாண்டியாவும் சிரித்து கொண்டாடினர்.

Story first published: Thursday, January 5, 2023, 20:29 [IST]
Other articles published on Jan 5, 2023
English summary
splendid catch from Rahul Tripathi to dismiss pathum nissanka splendid catch from Rahul Tripathi to dismiss pathum nissanka சிக்சர் சென்ற பந்து.. கடைசியில் பாய்ந்து கேட்ச் பிடித்த ராகுல் திரிபாதி.. அதிர்ச்சியில் பேட்ஸ்மேன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X