For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ரூ.201.36 கோடி: மத்திய அரசு

By
BCCI
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) ரூ.201.36 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக, மத்திய நீதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி குறித்து ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு மத்திய நீதித்துறை இணை மந்திரி பழனிமாணிக்கம் எழுத்துமூலம் அளித்த பதிலில், பிசிசிஐ மொத்தம் ரூ.201.36 கோடி வருமான வரி பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

பிசிசிஐ வருமான வரியாக மொத்தம் ரூ.548.42 கோடி செலுத்த வேண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் வருமான வரித்துறையினர் எடுத்த நடவடிக்கையின் மூலம் ரூ.347.06 கோடி வருமான வரியை பிசிசிஐ செலுத்தி உள்ளது. ஆனால் இன்னும் ரூ.201.36 கோடியை பிசிசிஐ வருமான வரி பாக்கி வைத்துள்ளது.

கடந்த 2009-10ம் நிதியாண்டில் பிசிசிஐ ரூ.413.59 கோடி வருமான வரி செலுத்த வேண்டும். அதில் ரூ.307.06 கோடியை மட்டுமே பிசிசிஐ செலுத்தியது. இதில் ரூ.106.53 கோடி வருமான வரி செலுத்தப்படாமல் உள்ளது.

மேலும் 2004-05ம் நிதியாண்டில் ரூ.49.51 கோடியும், 2005-06-ம் நிதியாண்டில் ரூ.85.32 கோடியும் கிரிக்கெட் வாரியம் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் இதில் ரூ.40 கோடி மட்டும் பிசிசிஐ செலுத்தி உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, August 25, 2012, 13:07 [IST]
Other articles published on Aug 25, 2012
English summary
An Income tax amount of Rs201.36 crore is due from the Board of Control for Cricket in India (BCCI), the government said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X