For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தண்ணீர் பஞ்சம்... மும்பையில ஐபிஎல் போட்டியை நடத்த பாஜக கடும் எதிர்ப்பு!

By Mathi
BJP asks IPL chairman to reconsider organising T20 matches in Mumbai
மும்பை: வறட்சியால் மிகக் கடுமையாக பாதித்திருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐபி எல தலைவர் ராஜிவ் சுக்லாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வினோத் தவாடே நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மும்பை மைதானத்தை சீரமைக்க பல்லாயிரம் லிட்டர் நீரை பயன்படுத்த வேண்டியது இருக்கும். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நூற்றாண்டில் இதுவரை ஏற்படாத வறட்சி நிலவி வருகிரது. இந்நிலையில் நீரை வீணாக்குவது சரியானது அல்ல.

ஐபிஎல் அணிகள் வறட்சி பாதித்த மகாராஷ்டிராவுக்கு நிவாரண உதவி கோருகின்றன. நிவாரண நிதியா? தண்ணீரா?என்றால் நிச்சயச்மாக தண்ணீருக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஹோலி பண்டிகையன்று அசாராம் பாபு டன் கணக்கிலான நீரை வீணாக்கிவிட்டார். இது போல் நீரை வீணாக்குவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகள் பலவும் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மும்பையில் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Monday, April 1, 2013, 16:22 [IST]
Other articles published on Apr 1, 2013
English summary
Questioning the rationale behind holding the Indian Premier League (IPL) matches in drought-hit Maharashtra, leader of opposition in the state legislative council Vinod Tawade on Sunday said he has written to the tournament organisers to reconsider the decision.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X