For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் கோப்பை: கிரிக்கெட் வீரர்கள் செல்போன் பயன்படுத்த ஐசிசி தடை!

By Mayura Akilan
Champions Trophy: ICC asks players to surrender mobiles before boarding team bus
லண்டன்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் போட்டிக்கு செல்லும் முன்பாக செல்போன்களை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

7வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றன. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தை அடுத்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஐசிசி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வீரர்கள் கண்காணிப்பு

வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் முதல் மைதானம் வரை அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மைதானத்திற்கு வீரர்கள் செல்போன் கொண்டு செல்ல கூடாது என்றும் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது ஐசிசி.

போட்டிக்கு செல்லும் முன் வீரர்கள் தங்கள் நிர்வாகத்திடம் செல்போனை ஒப்படைத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Friday, June 7, 2013, 10:32 [IST]
Other articles published on Jun 7, 2013
English summary
In the wake of the spot-fixing scandal surrounding the IPL and Bangladesh Premier League, the ICC is doing whatever it can to minimise the risk of corruption during the Champions Trophy, which starts in the United Kingdom from Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X