For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6வது ஐபிஎல்லின் 'கடைந்தெடுத்த கருமி' யார் தெரியுமா....??

டெல்லி: 6வது ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் கொடுக்காத பந்து வீச்சாளர் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் டேல் ஸ்டெயின் பெற்றுள்ளார்.

சன் ரைசர்ஸ் அணியின் வலுவான பந்து வீச்சாளராகத் திகழும் ஸ்டெயின் தான் உலகிலேயே நம்பர் ஒன் வேகப் பந்து வீச்சாளராகவும் திகழ்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மற்ற பந்து வீச்சாளர்களை விட ஸ்டெயின் மிகவும் அபாயகரமானவராக இருக்கிறார். இவரிடமிருந்து ரன்களை எடுப்பது என்பது காளை மாட்டிடம் பால் கறப்பதற்குச் சமமாக உள்ளது.

டாட்... டாட்.. ஸ்டெயின்

டாட்... டாட்.. ஸ்டெயின்

டேல் ஸ்டெயின் இதுவரை 160 பந்துகளை ரன் கொடுக்காமல் டாட் பண்ணியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு பந்து வீச்சாளர் அதிக அளவிலான டாட் பந்துகளைப் போட்டது இதுவே முதல் முறை.

2 முறை பஞ்சாபை வீழ்த்திய ஹைதராபாத்

2 முறை பஞ்சாபை வீழ்த்திய ஹைதராபாத்

ஐபிஎல்லில் பஞ்சாபுக்கு எதிரான 2 போட்டிகளிலும் வென்றுள்ளது ஹைதராபாத்.

இருப்பதிலேயே இதுதான் பெருசு

இருப்பதிலேயே இதுதான் பெருசு

6வது ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்றால் இதுதான். இதற்கு முன்பு புனே வாரியர்ஸுக்கு எதிராக 22 ரன் வெற்றியைப் பெற்றது ஹைதராபாத். நேற்று நடந்த போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில் பஞ்சாபை துரத்தியது.

முதல் ஐம்பது

முதல் ஐம்பது

நடப்பு ஐபிஎல் தொடரில், தனது முதல் அரை சதத்தை பார்த்திவ் படேல் நேற்று போட்டார். இதுவரை அவர் மொத்தம் நான்கு அரை சதங்களைப் போட்டுள்ளார்.

முதல் முறையாக மேன் ஆப் தி மேட்ச்

முதல் முறையாக மேன் ஆப் தி மேட்ச்

அதேபோல நேற்று ஐபிஎல்லில் முதல் முறையாக ஆட்ட நாயகன் விருதையும் நேற்றுதான் பெற்றார் பார்த்திவ் படேல்.

Story first published: Sunday, May 12, 2013, 16:15 [IST]
Other articles published on May 12, 2013
English summary
Here are the statistical highlights of the match between Kings XI Punjab and Sunrisers Hyderabad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X