For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போலார்ட் மட்டும் அந்த இரண்டு சிக்ஸரை அடிக்காம இருந்திருந்தா...!

கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கின்போது கடைசி ஓவரில் கீரன் போலார்ட் மட்டும் அந்த இரண்டு சிக்ஸர்களை அடிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சென்னையின் சேஸிங் எளிதாக இருந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

அதேபோல லசித் மலிங்கா தனது முதல் ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியதும் சென்னையின் மன முறிவுக்கு முக்கியக் காரணம் என்றும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

ஒரு வழியாக 6வது ஐபிஎல் தொடர் முடிந்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ், லீக் போட்டிகளில் சூப்பராக விளையாடி இறுதிப் போட்டிக்கு வந்து மடிந்து போய் விட்டது. ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த முடிவு.

சென்னையின் தோல்விக்கு ரசிகர்கள் சுட்டிக் காட்டும் இரண்டு முக்கிய விஷயங்கள் என்னவென்றால், ஒன்று போலார்டின் சிறப்பான ஆட்டம். 2வது மலிங்காவின் பந்து வீச்சு.

அதிரடி புயலாக மாறிய போலார்ட்

அதிரடி புயலாக மாறிய போலார்ட்

போலார்ட் ஆட்டத்தில் இறங்கும் வரை சென்னையின் கட்டுக்குள்தான் மும்பை இந்தியன்ஸ் இருந்தது. ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்களையாவது எட்டுமா என்ற நிலையும் கூட இருந்தது. ஆனால் போலார்டின் அதிரடி ஆட்டம் அதை மாற்றி விட்டது.

அடித்து நொறுக்கிய போலார்ட்

அடித்து நொறுக்கிய போலார்ட்

ஆனால் போலார்ட் வசம் ஆட்டம் திரும்பியபோது அவரைக் கட்டுப்படுத்தவோ ஆட்டமிழக்கச் செய்யவோ தவறி விட்டனர் சென்னை பந்து வீச்சாளர்கள்.

சிங்கிளாக சிலம்பிய சிங்கம்

சிங்கிளாக சிலம்பிய சிங்கம்

ஒருபக்கம் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்து வந்தபோதிலும் போலார்ட் தனியாளாக போராடி ரன்களைக் குவித்தார்.

சிக்ஸ் மழை

சிக்ஸ் மழை

இக்கட்டான நிலையில் விளையாடினாலும் கூட தனது ஸ்டைலில் சிக்ஸர்களைக் குவிக்கவும் அவர் தவறவில்லை.

ஆப்பு வைத்த அந்த 2 சிக்ஸர்கள்

ஆப்பு வைத்த அந்த 2 சிக்ஸர்கள்

அரை சதத்தைப் போட விடாமல் சென்னை பந்து வீச்சாளர்கள் அவரை கடுப்பாக்கியபோது டென்ஷனானார் போலார்ட். இந்த டென்ஷனை தனது கடைசி ஓவரின்போது அதிரடியாக வெளிப்படுத்தினார். கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்குத் திருப்பி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்த உதவினார். மேலும் தனது அரை சதத்தையும் ஸ்டைலாக பூர்த்தி செய்தார்.

போலார்ட் மட்டும் இல்லாவிட்டால்

போலார்ட் மட்டும் இல்லாவிட்டால்

நேற்றைய போட்டியில் போலார்ட் மட்டுமே அதிரடியாகவும், அதி வேகமாகவும் ஆடினார். அவரது ஆட்டம் மட்டும் இல்லாவிட்டால் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் குவிப்பு நின்று போயிருக்கும். சென்னைக்கும் சேஸிங் ஈசியாக இருந்திருக்கும்.

மலிங்காவின் அட்டகாசம்

மலிங்காவின் அட்டகாசம்

அதேபோல மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்காவின் அபாயகரமான பந்து வீச்சு. முதல் ஓவரிலேயே மைக் ஹஸ்ஸியை அவர் அவுட்டாக்கியபோது அத்தனை பேரின் இதயமும் நின்று போனது. அதே போல அடுத்த பந்திலேயே சுரேஷ் ரெய்னாவையும் அவர் தூக்கியபோது செத்தே போனார்கள் ரசிகர்கள்.

ஜான்சன் வைத்த 3வது ஆப்பு

ஜான்சன் வைத்த 3வது ஆப்பு

தொடர்ந்து மிச்சல் ஜான்சன், பத்ரிநாத்தைப் பதம் பார்த்தபோது எல்லாம் முடிஞ்சு போச்சு போங்கடா என்ற மன நிலைக்கு ரசிகர்கள் வந்து விட்டனர்.

அம்சம் டூ அசமஞ்சம்

அம்சம் டூ அசமஞ்சம்

அம்சமாக ஆடும் நேர்த்தியைக் கொண்டவர்கள் என்று பெயர் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்களது சேஸிங்கை அசமஞ்சமாக மேற்கொண்டு ரசிகர்களை வெறுப்பேற்றினர். யாருக்குமே ஒரு சுரத்து இல்லை. இதுவும் அவர்கள் மீண்டெழ வழியில்லாமல் போக முக்கியக் காரணம்.

ஒரு வேளை பிக்ஸிங் சர்ச்சையால் மனம் வெறுத்துப் போயிருந்தனரோ, என்னவோ... எப்படியோ ஊத்தி முடியாச்சு, அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்!

Story first published: Monday, May 27, 2013, 11:20 [IST]
Other articles published on May 27, 2013
English summary
Mumbai Indians' Pollard and Malinga changed CSK's calculations and demolished Chennai's dream to win their 3rd IPL title.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X