''அப்படியே, அய்யா பிராட்மேன் மாதிரியே விளையாடுகிறார் ஷிகார் தவான்''

மொகாலி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷிகார், தனது அதிரடி ஆட்டத்தால் அத்தனை பேரையும் அயர வைத்து விட்டார். ஷிகாரைத்தான் தற்போது எட்கோவன் புகழ்ந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து எட்கோவன் கூறுகையில், ஷிகாரின் ஆட்டத்தைப் பார்த்தபோது அப்படியே அய்யா (Sir) பிராட்மேன் ஆட்டத்தைப் பார்த்தது போலவே இருந்தது. இப்படி ஒரு ஆட்டத்தை சமீபகாலத்தில் நான் சர்வதசே கிரிக்கெட்டில் பார்த்ததில்லை. அருமையான ஆட்டம் அது. ஒவ்வொரு பந்தையும் அவர் அடித்த விதம் கிளாஸ். எதிலுமே அவர் தவறு செய்யவில்லை. பிரமாதமான ஆட்டம்.
அந்த நாள் நிச்சயம் ஷிகாரின் நாள்.அதில் யாருக்குமே சந்தேகம் வரத் தேவையில்லை என்றார் எட்கோவன்.
Story first published: Thursday, March 21, 2013, 8:59 [IST]
Other articles published on Mar 21, 2013


Click it and Unblock the Notifications