டோணி, ஹர்பஜன் குறித்து தவறாகப் பேசி விட்டேன்- ஸ்ரீசாந்த் தந்தை மன்னிப்பு

By Sutha
Sreesanth's dad apologies to Dhoni, Bhajji
திருவனந்தபுரம்: கேப்டன் டோணி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசி விட்டேன். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். கேரள மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்த்தை ஸ்பாட் பிக்ஸிங் புகாரின் பேரில் போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர், கேப்டன் டோணியும், ஹர்பஜன் சிங்கும்தான் இதற்குக் காரணம். பஞ்சாப் டி.எஸ்.பி. ஒருவரை வைத்து இந்த சதியை அரங்கேற்றியுள்ளார் ஹர்பஜன் சிங். டோணியும், ஹர்பஜனும் சேர்ந்து எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் கைது செய்யப்பட்டதைக் கேட்டதும் எனக்கு எதுவும் ஓடவில்லை. அந்த நேரத்தில் ஏற்பட்ட பதட்டத்தில் டோணி, ஹர்பஜன் குறித்துப் பேசி விட்டேன்.

இதற்காக நான் டோணி, ஹர்பஜன் சிங்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கேரள மக்களும் என்னை மன்னிக்க வேண்டும் என்றார் நாயர்.

 
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Though Sreesanth's father Santhakumaran Nair had initially said his son was a victim of conspiracy by India captain Mahendra Singh Dhoni and off-spinner Harbhajan Singh, he retracted the statement later and expressed regret. Nair told television channels he had made the remarks "following some misunderstanding" and on the spur of the moment on hearing the arrest of his son, who, he said, "will not do anything in a wrong manner". "I seek apology from Dhoni, Harbhajan Singh and people of Kerala," he said hours after Delhi police gave details of the scandal.
Story first published: Friday, May 17, 2013, 8:57 [IST]
Other articles published on May 17, 2013
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more