For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பான்டிங் சர்ச்சை.. சரி 20 ஆண்டுகாலத்தில் டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா சிறந்தவர் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை வெடிக்க வைத்திருக்கிறார் பானடிங்...அவர் எப்போதும் இப்படித்தான் விமர்சிப்பார் என்ற எதிர்க்குரல்கள் ஏராளம்.

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டுகாலமாக இடம்பிடித்து ஆடி வருகிறவர் டெண்டுல்கர். அவர் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில்தான் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கும் உள்ளார். இருந்தாலும் நேற்று அவர் லாராதான் சச்சினைவிட நன்றாக ஆடக் கூடியவர், நடுங்க வைக்கக் கூடியவர், வீழ்த்த முடியாதவர் என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தார். இது சச்சினின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் கடும் விமர்சனங்களையும் கிளப்பிவிட்டது.

சரி..கடந்த 20 ஆண்டுகாலமாக விளையாடி வரும் 5 தலைசிறந்த டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களைப் பற்றிய ஒரு பார்வை பார்க்கலாம்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

"கிரிக்கெட்டின் கடவுள்" என்று வழிபடக் கூடியவர் டெண்டுல்கர். கடந்த 24 ஆண்டுகாலமாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 15,837 ரன்களை எடுத்த டெண்டுல்கர், 51 சதங்களை சாத்தியிருக்கிறார்.

பிரையன் லாரா

பிரையன் லாரா

டிரினாட் தீவுகளின் இளவரசர் என்ற புகழாரத்துக்குரியவர்.இவரைத்தான் பான்டிங் சிலாகித்து சிலிர்த்து பாராட்டினார். மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய லாரா 11,953 ரன்களை எடுத்திருக்கிறார். அடித்த சதங்களின் எண்ணிக்கை 34.

ரிக்கி பான்டிங்

ரிக்கி பான்டிங்

சச்சினை சீண்டி லாராவை புகழ்ந்தவர் பான்டிங். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இவர் மொத்தம் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,378 ரன்களை எடுத்திருக்கிறார். இவரது சதங்களின் எண்ணிக்கை 41.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தடுப்புச் சுவாரக வர்ணிக்கப்படுகிறவர் டிராவிட். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களை எடுத்ததுடன் 36 சதங்களை சாத்தியுள்ளார்.

ஸ்டீவ் வாக்

ஸ்டீவ் வாக்

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் வாக்.. முன்னவர்களைப் போல ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர். மொத்தம் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 10, 927 ரன்களை எடுத்திருக்கிறார். சதங்களின் எண்ணிக்கை 32.

இப்ப சொல்லுங்க பான்டிங் சொன்னது சரியா?

Story first published: Friday, July 19, 2013, 13:42 [IST]
Other articles published on Jul 19, 2013
English summary
Former Australian captain Ricky Ponting recently said Brian Lara, owing to his inherent ability to turn the tide in his team's favour within the blink of an eye, was probably the better batsman than Indian batting great Sachin Tendulkar. The list of five greatest batsmen who have graced the game of cricket in the last two decades:
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X