இன்னும் எங்களுக்கு பிளே ஆபுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.. சொல்கிறார் கம்பீர்

Posted By:

ராஞ்சி: இன்னும் எங்களுக்கு பிளே ஆப் பிரிவுக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பீர்.

கொல்கத்தா அணி கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரை விட்டு நீங்கி விட்டது. 13 போட்டிகளில் ஆடி 8 தோல்விகளைச் சந்தித்துள்ளது அந்த அணி. இருப்பினும் இப்போதும் கூட நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார் கம்பீர்.

இன்னும் கூட வீண் போகவில்லை. முயன்றால் எங்களாலும் பிளே ஆபுக்குகள் நுழைய முடியும் என்கிறார் கம்பீர்.

இன்னும் வாய்ப்புள்ளது

இன்னும் வாய்ப்புள்ளது

இதுகுறித்து கம்பீர் கூறுகையில், எல்லாமே முடிந்து போய் விடவில்லை. இன்னும் கூட எங்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது.

3 போட்டிகளிலும் வென்றால் முடியும்

3 போட்டிகளிலும் வென்றால் முடியும்

எங்களுக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருடன் மோதுகிறோம். இதில் வெல்ல வேண்டும். மற்ற போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டுடன் வெல்ல வேண்டும். வென்றால் பிளே ஆப் சாத்தியம்தான்.

கெய்ல் பற்றிக் கவலை இல்லை

கெய்ல் பற்றிக் கவலை இல்லை

கெய்லோ, கோஹ்லியோ, ஆப் டி வில்லியர்ஸோ.. யாரைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை. தனிப்பட்ட வீரர்கள் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை. ஒரு அணியாக மட்டுமே பார்க்கிறோம். அப்படித்தான் பெங்களூரையும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்.

சுளுக்கெடுப்பார் சுனில்

சுளுக்கெடுப்பார் சுனில்

பெங்களூருக்கு எதிரான போட்டியில் சுனில் நரைனை பெரிதும் நம்புகிறோம். நிச்சயம் சுனி்ல் கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

வேகமும் இருக்கு

வேகமும் இருக்கு

எங்களிடம் சுழற்பந்துமட்டும் சாதகமாக இல்லை. பாலாஜி, கல்லிஸ் போன்ற நல்ல வேகப் பந்து வீச்சும் உள்ளது என்றார் அவர்.

கம்பீர் நினைப்பது நடக்குமா... ?

Story first published: Sunday, May 12, 2013, 13:29 [IST]
Other articles published on May 12, 2013

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற