For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கை வீரர் செனநாயக்கே பவுலிங் விதிமுறைகளை மீறியது நிரூபணம் ... பந்து வீச தடை விதித்தது ஐசிசி!

கொழும்பு: இங்கிலாந்து தொடரின் போது சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர் செனநாயக்கேவுக்கு பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளரான செனநாயக்கே (29) மீது பந்தை எறிவது வீசுவதாக நடுவர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செனநாயக்கேவின் பந்து வீச்சு முறைகளை சிறப்பு நிபுணர்கள் மூலம் ஐ.சி.சி. பரிசோதனை செய்தது.

Sri Lankan Spinner Sachithra Senanayake Banned From Bowling by ICC

சிறப்பு நிபுணர்கள் அளித்த தகவலின் படி, செனநாயக்கேவின் பந்து வீச்சு, பவுலிங் விதிமுறைகளுக்கு புறம்பானதாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிப்பதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

பந்துவீச்சில் உள்ள சர்ச்சைகளை களைந்து மறுஒப்புதல் பெற்றால் மட்டுமே அவர் இனி பந்து வீச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 13, 2014, 14:26 [IST]
Other articles published on Jul 13, 2014
English summary
Sri Lanka's off-spinner Sachithra Senanayake has been banned from international cricket with immediate effect after his bowling action during a match against England proved illegal, it was announced Saturday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X