For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசம் "மெகா" தோல்வி - முஷ்பிகுரின் 'தள்ளிவிடு" மேட்டரால்.. வச்சு செய்யும் இலங்கை ஃபேனஸ்

டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதேசமயம், வேற ஒரு மேட்டருக்காக வங்கதேச அணியை வச்சு செய்து வருகின்றனர்.

இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டாக்காவில் நடைபெற்றது. இதில், முதல் இரண்டு ஆட்டங்களையும் வென்று வங்கதேசம் தொடரை கைப்பற்றிவிட்டது.

இதனால், கடைசி ஒருநாள் போட்டி "ஜஸ்ட் ஒரு ஃபார்மாலிட்டிக்காக" நடைபெற்றது. எனினும், இலங்கை ரசிகர்கள் வெறித்தனமாகவே இப்போட்டியை பார்த்தார்கள். அதற்கு காரணம், 2வது போட்டியில், வங்கதேசம் அடித்த கூத்து தான்.

 இலங்கை தோல்வி

இலங்கை தோல்வி

2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 48.1 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் 125 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு மழையின் காரணமாக 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

 தள்ளிவிடு அவன

தள்ளிவிடு அவன

இந்த போட்டியில், இலங்கை அணி பேட்டிங் செய்த போது 11வது ஓவரை வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் நின்ற குணதிலகா, பந்தை மெஹிதி ஹசனிடம் மெதுவாக தட்டிவிட, மறுமுனையில் நின்றிருந்த பதும் நிஷங்கா, சிங்கிள் எடுக்க கிறீஸை விட்டு வெளியேறினார். பிறகு, பவுலர் பந்தை தடுத்து நிறுத்த பின்வாங்கிவிட்டார். அப்போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர், பவுலர் மெஹிதியிடம், " உன் வழியில் குறுக்கே வந்தால், பிடித்து அவனை கீழே தள்ளிவிடு' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இவை ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாக, அவரது அன்றைய தின 'ஹீரோயிக்' சதத்தை தாண்டி, ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

 கேப்டன் சதம்

கேப்டன் சதம்

இதனால், முஷ்பிகுர் மீதும், வங்கதேசம் மீதும் ஏக கடுப்பில் இருந்த இலங்கை ரசிகர்கள், இன்றைய இறுதிப் போட்டியை 'கமான் கமான்' என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் குஷல் பெரேரா 120 ரன்கள் விளாசினார்.

 ட்ரோல் மெட்டீரியல்

ட்ரோல் மெட்டீரியல்

பிறகு ஓரளவுக்கு கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, வங்கதேச அணியை சமூக தளங்களில் இலங்கை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக, அவர்களது மெயின் ட்ரோல் மெட்டீரியலாக இருப்பவர் முஷ்பிகுர் தான். நல்லவேளை நாகினி டான்ஸ் போடல..

Story first published: Friday, May 28, 2021, 21:00 [IST]
Other articles published on May 28, 2021
English summary
srilanka beat bangladesh 3rd odi kusal perera - முஷ்பிகுர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X