For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேங்கப்பா.. ரூ 16,347 கோடிக்கு ஐபிஎல் ஒளிபரப்பு ரைட்ஸை வாங்கிய ஸ்டார் டிவி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு ஏலத்தை வாங்கியது ஸ்டார் டிவி சானல்களை நடத்தி வரும் ஸ்டார் ஸ்போர்ட் இந்தியா.

By Lakshmi Priya

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ஸ்டார் டிவி சானல்களை நடத்தி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் ரூ. 16,347 கோடிக்கு பெற்றது.

ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன. இவற்றை கடந்த 2008- ல் நடந்த முதல் ஐபிஎல் தொடரிலிருந்து சோனி டிவி நிறுவனம் ஒளிபரப்பி வந்தது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுடன் அந்த நிறுவனம் பெற்ற ஒளிபரப்பு உரிமம் முடிவடையவுள்ளது. இதனால் பிசிசிஐ நிறுவனம் இன்று மும்பையில் அதற்கான ஏலத்தை நடத்தின.

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

உலகின் முன்னணி நிறுவனங்களான பேஸ்புக், அமேசான், டுவிட்டர், யாகூ, ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டார் இந்தியா, சோனி பிக்ஸர்ஸ். டிஸ்கவரி, ஸ்கை, பிரிட்டிஷ் டெலிகாம் மற்றும் இஎஸ்பிஎன் டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்துக்கு விண்ணப்பித்தன.

பிசிசிஐ கருதியது என்ன

பிசிசிஐ கருதியது என்ன

எனினும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் தகுதி சோனி நிறுவனத்துக்கும், ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்கும் இருப்பதாக பிசிசிஐ கருதியது. அதனால் இந்த இரு நிறுவனங்களும் போட்டியிட்டன.

5 ஆண்டுகளுக்கு...

5 ஆண்டுகளுக்கு...

இதில் கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தை பெற்று வந்த சோனி நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அந்த உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றது. 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டிவி வாங்கியுள்ளது. இதற்கான ஏலத்தொகை ரூ. 16,347 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மடங்கு

இரண்டு மடங்கு

கடந்த 2008ம் ஆண்டு சோனி நிறுவனம் ரூ. 8000 கோடிக்குத்தான் இந்த உரிமத்தைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு ஸ்டார் டிவி உரிமத்தை வாங்கியுள்ளது.

Story first published: Monday, September 4, 2017, 14:32 [IST]
Other articles published on Sep 4, 2017
English summary
Star India wins the IPL media rights (TV and digital) for 2018-2022 with a bid of Rs 16,347.5 crore. Highest territorial combined bid was Rs 15,819.54 crores.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X