24 பந்தில் 38 ரன்.. டி வில்லியர்ஸ் போல அதிரடி ஆட்டம் ஆடிய நியூசி. வீரர்.. தேடி வந்த பாராட்டு!

வெல்லிங்டன் : இந்தியா -நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

INDvsNZ 1st Test | New Zealand won by 10 wickets | இந்தியாவுக்கு மோசமான தோல்வி

இதில் முதலில் களமிறங்கி ஆடிய இந்தியா 165 ரன்களில் சுருண்ட நிலையில், அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 348 ரன்களை அடித்து இந்தியாவைவிட 183 ரன்களை அதிகமாக எடுத்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்களை எடுத்துள்ளது.

2வது இன்னிங்சில் இந்தியா

2வது இன்னிங்சில் இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 165 ரன்களில் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்துள்ளது. தற்போது 3வது நாளில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

123 ரன்களை குவித்த மூவர்

123 ரன்களை குவித்த மூவர்

நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை எடுக்கும்வகையில் இந்திய பௌலர்கள் திறமையான பந்துவீச்சை அளித்தனர். ஆனால் அடுத்ததாக வந்த அந்த அணியின் 3 பௌலர்கள், சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தனர். ஜாமீசன், டிரெண்ட் போல்ட் உள்ளிட்ட பௌலர்கள் சிறப்பாக ஆடி, அந்த அணி இந்தியாவை விட 183 ரன்கள் அதிகமாக எடுக்க காரணமாக இருந்தனர்.

5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

காயம் காரணமாக கடந்த போட்டிகளில் ஆடாமல் இருந்த இந்திய பௌலர் இஷாந்த் சர்மா, இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான இந்த முதல் போட்டியில் 22 ஓவர்களில் 68 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதில் 6 மேட்-இன் ஓவர்களையும் அவர் போட்டு நியூசிலாந்திற்கு 'டப்' கொடுத்தார்.

24 பந்துகளில் 38 ரன்கள்

24 பந்துகளில் 38 ரன்கள்

மூன்றாவது நாளான இன்று களமிறங்கிய நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட், தனது அதிரடி ஆட்டத்தின்மூலம் 24 பந்துகளில் 38 ரன்களை எடுத்துள்ளார். இதையடுத்து இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ரிஷப் பந்த் கேட்சில் அவுட்டானார். இதன்மூலம் நியூசிலாந்து மேலும் ரன்களை குவிக்காமல் இந்திய அணி தடுத்தது.

டிரெண்ட் போல்ட்டுக்கு பாராட்டு

டிரெண்ட் போல்ட்டுக்கு பாராட்டு

3வது நாளின் துவக்கத்தில் டிரெண்ட் போல்ட் 24 பந்துகளில் 38 ரன்களை குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீபன் பின் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது ஆட்டம் முன்னாள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏபி டீ வில்லியர்சின் ஆட்டத்தை நினைவு படுத்துவதாக அவர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்தியா -நியூசிலாந்திற்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜெயிப்பதன்மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தன்னுடைய முதல் இடத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும். ஆனால், இந்தியா, இதுவரையிலான ஆட்டத்தில் சொதப்பி வருகிறது. இதற்கு டிரெண்ட் போல்ட்டின் அபாரமான பௌலிங்கும் காரணமாக அமைந்துள்ளது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அவர் இதுவரை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அதிரடி பேட்டிங்கையும் அவர் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Trent Boult's Unique Batting Style Invites Special Comparison
Story first published: Sunday, February 23, 2020, 14:57 [IST]
Other articles published on Feb 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X