For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி குறித்து வெளிநாட்டு முன்னாள் வீரர்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்கு தான் விசுவாசமாக இருப்பதால் தவறான யோசனைகளை வழங்கி இந்திய அணியை வழிநடத்துவதாக சுனில் கவாஸ்கர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் நமது ஊடகங்கள் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்களிடம் இந்தியாவுக்கு யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்காதீர்கள்.

அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு சீனியர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார் அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு சீனியர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்

 தேவையில்லாத வீரர்

தேவையில்லாத வீரர்

வெளிநாட்டு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் எல்லாம் அவர்கள் சொந்த நாட்டுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள். எனவே அவர்கள் எந்த வீரர்கள் இந்தியாவுக்கு தேவைப்பட மாட்டார்களோ அவர்களை தான் முன்மொழிந்து அணியில் சேர்க்க சொல்வார்கள். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இப்படித்தான் நடந்தது.

ஒரு புதிய வீரரை அணிக்குள் சேர்க்க சொல்லி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்.

தவறை செய்யாதீர்

தவறை செய்யாதீர்

இதன் காரணமாக அந்த இளம் வீரரை இந்திய அணியில் தேர்வு குழுவும் சேர்த்தார்கள். இதற்காக ஏற்கனவே தனது திறமையை நிரூபித்த வீரருக்கு அவர்கள் வாய்ப்பு வழங்கவில்லை. கிரிக்கெட் இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு என்பதால் கிரிக்கெட் தொடர்பான நிறைய செய்திகளை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள் இருக்கிறார்கள்.

கவலையில்லை

கவலையில்லை

இதற்காக வெளிநாட்டு வீரர்களிடம் இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் பேட்டி கேட்கிறார்கள். இது இந்திய அணியையும் இந்திய ரசிகர்களையும் அவமதிக்கும் காரியமாக நான் கருதுகிறேன். தற்போதுள்ள இந்திய அணியில் இளம் வீரர்கள் நீக்கப்பட்டாலும் அது குறித்து அவர்கள் கவலைப்படவே இல்லை. ஐபிஎல் தொடரில் விளையாடி பணத்தை சம்பாதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

இல்லை ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் நாம் சர்வதேச கிரிக்கெட்டில் சொதப்பியதை அனைவரும் மறந்து விடுவார்கள் என்று இளம் வீரர்கள் நினைக்கிறார்கள். இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று சிலர் அதிரடியாக ஆடுவது நன்மையிலும் முடிகிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விஜய் சங்கரை தேர்வுக்குழு சேர்த்ததையே மறைமுகமாக கவாஸ்கர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

Story first published: Tuesday, January 24, 2023, 15:03 [IST]
Other articles published on Jan 24, 2023
English summary
Sunil Gavaskar criticize foreign commentators will loyal to their country அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X