For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னிக்கு தான் லாஸ்ட் மேட்ச்.. சொந்த ஊருக்கு செல்லும் அந்த அதிரடி வீரர்.. கவலையில் சன்ரைசர்ஸ்

ஹைதராபாத்:இன்று நடக்கவிருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் உலக கோப்பை தொடர் பயிற்சிக்காக ஆஸ்திரேலியா திரும்புகிறார்.

2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு அணிகளுக்கும் கிட்டத்தட்ட 12 போட்டிகள் முடிவடைந்த நிலையில், மேலும் 2 போட்டிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு சரியாக ஒரு மாத காலத்தில் உலக கோப்பை துவங்க இருக்கிறது. அந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துவிட்டன.

அடங்கப்பா.. போட்டிக்குப் பின்.. மனைவிக்கு கிலோ கணக்கில் ஐஸ் வைத்த ஆண்ட்ரே ரஸ்ஸல்!! அடங்கப்பா.. போட்டிக்குப் பின்.. மனைவிக்கு கிலோ கணக்கில் ஐஸ் வைத்த ஆண்ட்ரே ரஸ்ஸல்!!

நாடு திரும்பும் வீரர்கள்

நாடு திரும்பும் வீரர்கள்

அதன் காரணமாக, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடக்கும் சர்வதேச தொடர்களிலும் மற்றும் உலக கோப்பை பயிற்சிகளிலும் ஈடுபட நாடு திரும்பி வருகின்றனர். ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து எதிரான தொடரில் ஆட தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்டோக்ஸ், பட்லர்

ஸ்டோக்ஸ், பட்லர்

குறிப்பாக ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய மூவரும் நாடு திரும்பி பெரும் வெற்றிடத்தை உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நன்கு துவக்கம் அமைத்து வந்த பெயர்ஸ்டோவ் நாடு திரும்பியுள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது.

நாடு திரும்புகிறார்

நாடு திரும்புகிறார்

தற்போது அந்த அணிக்கு மற்றொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்று பஞ்சாப் அணியை எதிரான போட்டிக்கு பிறகு அணியின் துவக்க வீரர் மற்றும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் வார்னர் நாடு திரும்புகிறார்.

தொடரும் இழுபறி

தொடரும் இழுபறி

இவர் இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் 611 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அதில் 7 அரைசதங்கள் அடங்கும். ஏற்கனவே, சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? தகுதி பெறாதா? என்ற இழுபறி இருக்கிறது. இத்தகைய சூழலில் தற்பொழுது டேவிட் வார்னர் வெளியேறுவது பெரும் அதிர்ச்சியாக இருக்கும். வார்னர் இல்லாத போட்டிகளில் ஹைதராபாத் அணி எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Monday, April 29, 2019, 14:24 [IST]
Other articles published on Apr 29, 2019
English summary
Sunrisers Hyderabad will miss David Warner.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X