செல்லம், ச்சோ க்யூட்.. ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னா மகள்

Posted By:

மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது செல்ல மகள் கிரேசியாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தை கலக்கி வருகிறது.

டோணி மகள் ஜிவா மலையாளத்தில் பாடிய பாடல் இரு தினங்களாக வைரலாக சுற்றி வரும் நிலையில், சுரேஷ் ரெய்னா இன்ஸ்டிராகிராமில் தனதுமகள் கிரேசியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Suresh Raina with his daughter

தனது மகளை, மதிப்புமிக்க, விலைமதிப்பு இல்லாத, சுத்தமான என்று வர்ணித்துக்கொண்டே செல்லும் சுரேஷ் ரெய்னா, இதுதான் தந்தை மகள் நடுவேயான உறவு என்று குறிப்பிட்டுள்ளார்.

துறுதுறு விழிகளுடன் கிரேசியா அம்சமாக இருக்கும் போட்டோ இப்போது இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சிஎஸ்கே அணியில் அவர் ஆடப்போவதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Story first published: Monday, October 30, 2017, 10:03 [IST]
Other articles published on Oct 30, 2017
Please Wait while comments are loading...