For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, ரெய்னா சாதனையை முறியடித்த சூர்யகுமார்.. அறிமுகமாகி 2வது ஆண்டிலேயே தகர்த்து அசத்தல்.. விவரம்

ராஞ்சி : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளிலே பல்வேறு சாதனைகளை உடைத்து வருகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 47 ரன்களை விளாசினார். எனினும் முக்கிய கட்டத்தில் அவர் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி தோல்வியை தழுவியது.

கோலி பண்ண ஸ்லெஜிங்.. ஐஸ்கிரீம்க்குள் சிக்கன்.. சூரியகுமார் யாதவ் வெளியிட்ட ரகசிய தகவல்கோலி பண்ண ஸ்லெஜிங்.. ஐஸ்கிரீம்க்குள் சிக்கன்.. சூரியகுமார் யாதவ் வெளியிட்ட ரகசிய தகவல்

சாதனை நாயகன்

சாதனை நாயகன்

சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்து சாதனையை படைத்தார். இதன் மூலம் டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள சூர்யகுமார் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

தோனி, ரெய்னா சாதனை

தோனி, ரெய்னா சாதனை

நேற்று இன்னிங்ஸ் மூலம் சூர்யகுமார் யாதவ் ஒரு பெரிய சாதனையை முறியடித்து இருக்கிறார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்திருக்கிறார்.

எத்தனை போட்டிகள்

எத்தனை போட்டிகள்

44 இன்னிங்ஸ் விளையாடி அவர் 1625 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 178 ஆகும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 98 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும், சுரேஷ் ரெய்னா 78 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1605 ரன்கள் அடித்திருக்கிறார்கள்.

டாப் 5 வீரர்கள்

டாப் 5 வீரர்கள்

சர்வதேச t20 கிரிக்கெட்டில் விராட் கோலி 4008 ரன்கள் அடித்து முதல் இடத்திலும், ரோகித் சர்மா 3853 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், கேஎல் ராகுல் 2265 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும், ஷிகர் தவான் 1759 ரன்கள் அடித்து நான்காவது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 1625 ரன்கள் அடித்து ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

Story first published: Saturday, January 28, 2023, 17:21 [IST]
Other articles published on Jan 28, 2023
English summary
Suryakumar yadav breaks MS Dhoni and suresh raina record in t20i cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X