சூர்யகுமாருக்கு கைவிரித்த தேர்வுக்குழு.. கனவிற்காக அதிரடி முடிவு.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், தனது எதிர்காலத்திற்காகவும், கனவை நோக்கி செல்வதற்காகவும் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளார்.

இந்த ஆண்டு டி20 போட்டிகளில் சூர்யகுமார் அற்புதமான பார்மில் உள்ளார். இந்த ஆண்டு 31 T20I போட்டிகளில், அவர் 46.56 சராசரியில் 1,164 ரன்கள் எடுத்துள்ளார்.

இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் என கலக்க வந்த சூர்யகுமாரால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதே போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஒருநாள் கிரிக்கெட் சராசரி என்ன தெரியுமா? ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு தேவை.. தினேஷ் கார்த்திக் ஆதரவு! ஒருநாள் கிரிக்கெட் சராசரி என்ன தெரியுமா? ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு தேவை.. தினேஷ் கார்த்திக் ஆதரவு!

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

சூர்யகுமார் யாதவால் நடப்பாண்டு, 13 ஒருநாள் போட்டிகளில் 26.00 சராசரியில் 260 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால்

சூர்யகுமார் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை படைத்துள்ளார் 77 போட்டிகள் மற்றும் 129 இன்னிங்ஸ்களில் 44.01 சராசரியுடன் 5,326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 14 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமக்கு வாய்பபு வழங்கப்படும் என்று சூர்யகுமார் யாதவ் நம்பினார். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதன் படி, பிசிசிஐ தமக்கு ஓய்வு கொடுத்தாலும், வரும் ரஞ்சி போட்டியில் மும்பை அணிக்காக விளையாட அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் திமது திறமையை நிரூபிகக வாய்ப்பு கிடைக்கும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் எப்படி பொறுமையாக விளையாடி விட்டு, பிறகு எப்படி அதிரடியை காட்டுவது என்ற ஐடியாவுக்கு சூர்யகுமார் யாதவ்க்கு கிடைக்கும். தற்போது மும்பை அணியில் ஏற்கனவே பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஆந்திராவுக்கு எதிரான தொடக்க ஆட்டக்காரருக்கான 17 பேர் கொண்ட அணியில் உள்ளனர். இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானேவுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

எப்போது விளையாடுகிறார்?

எப்போது விளையாடுகிறார்?

கடந்த சீசனில் நாக் அவுட்டுக்கு தேர்வான சர்பராஸின் சகோதரர் முஷீர் கானும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி மற்றும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் விஜய் ஹசாரே டிராபியின் போது ஏற்பட்ட காயங்களில் இருந்து மீளவில்லை, எனவே அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. சூர்யகுமார் யாதவை பொறுத்த வரையில், அவர் ஐதராபாத்துக்கு எதிரான 2வது போட்டிக்கு மும்பை அணியில் விளையாடுவார். ரஞ்சி தொடர் வரும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி

மும்பை அணி

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), பிருத்வி ஷா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்மான் ஜாபர், சர்பராஸ் கான், சுவேத் பார்கர், ஹர்திக் தாமோர், பிரசாத் பவார், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, மோகித் அவஸ்தி, சித்தார்த் ரவுத், ராய்ஸ்டன் தியாஸ், சூர்யான் ஷெட்ஜ், ஷஷாங்க் அட்டார்டே, முஷீர் கான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Suryakumar yadav decided to play in ranji trophy despite giving rest
Story first published: Tuesday, December 6, 2022, 19:30 [IST]
Other articles published on Dec 6, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X